பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் 'பழந் தமிழ்நாட்டு மக்கள் வேற்றுநாட்டாருடன் நெருங்கிய தொடர்புகொள்வதற்கு முன்னமே, தமிழிலக் கியம் தோன்றி வளரத் தொடங்கியது. அதனால் பழந்தமிழ் இலக்கியம் நாட்டின் சொந்தக் கலையாய் வளர்ந்தது எனலாம். வேற்றுநாட்டு இலக்கியத்தின் சார்போ கலப்போ இல்லாமல் தமிழிலக்கியம் வளர்ந்த காலம் அது; ஆதலின் தமிழ்நாட்டின் இயற்கை வளமும் பழந்தமிழரின் வாழ்க்கை நெறியுமே அந்தப் பழைய இலக்கியத்திற்கு அடிப்படையாய் அமைந்தன என்று தழிழ்க்கலைக்களஞ்சியக் கட்டுரையொன்றில் (தொகுதி w. ப. 478) டாக்டர் மு. வரதராசனார் குறிப்பார். மாக்க முல்லர் கருத்துப்படி, தமிழ்மொழி தனித்தன்மை வாய்ந்த இலக்கியச் செல்வத்தைப் பெற்றுத் திகழும் பெருமை உடையது. தமிழ் இலக்கணம் குறித்த தொன்னுாலான தொல்காப்பியத்தில் அதற்கும் முந்தைய இலக்கணங்கள் பற்றிய குறிப்புகள் பல்வேறு நூற்பாக்களில் இடம்பெற்றுள்ளன. இதனின்று தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தமிழ்மொழி இலக்கண இலக்கிய வளமுடையதாக இருந்திருக்க வேண்டுமென அறியலாம். அறிஞர் தனிநாயக அடிகளார் தமது தமிழ்த்துாது' என்னும் அரிய நூலில், தமிழ்ப்புலவர்கள் தங்களது கவித்திறத்தை வெளிப்படுத்து வதற்கு மக்கள் வாழ்க்கையை அடிப்படையாகவும் இயற்கையைத் துணையாகவும் கொண்டனர் என்றும், பழந்தமிழ்ப்புலவர்கள் போன்று எந்தப் புலவரும் இயற்கையை ஆழமாகப் படைத்துக் காட்டவில்லை என்றும் குறிப்பிடுகின்றார். மொழி வாயிலாக வாழ்க்கையை வெளிப்படுத்துவது இலக்கியம் என்று அட்சனால் நிறுவப்