பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 படுகின்ற உண்மை, தமிழ்மொழி அளவிற்கு வலிவாக வேறெங்கும் மெய்ப்பிக்கப் படவில்லை. சங்க காலம் எனப்படுவது கி. மு. 500 முதல் கி. பி. 200 வரையிலான காலம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சங்கத்தொகை நூல்கள் எட்டுத்தொகை, பத்துப் ւու-Փ என்னும் பிரிவுகளாய்ப் பகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முதலாவதாகிய எட்டுத்தொகையில் இடம் பெற்றுள்ள இலக்கியங்களில் சில, தமிழ்மொழியில் எழுந்த உண்மையான இலக்கியப் படைப்புகளில் அடங்கும். எட்டுத்தொகையுள் ஒன்றான பதிற்றுப்பத்து சேரர்களைப் பற்றிய தனி நூலாகும். எனவே இவ்ஆய்வு, பதிற்றுப்பத்து குறித்த ஆய்வோடு தொடங்குகின்றது.