பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2I தெளிவாகும். மேலும் வழக்கிலுள்ள சேர சோழ பாண்டியர்' என்னும் தொடரில் சேரர் முற்படக் கூறப் படுதலும் சேரர் சிறப்பினைத் தெளிவுறுத்தும். பழந் தமிழ்நாட்டு வரலாற்றினைப் பரக்கப் பேசும் புறநானூறு பழமை சான்ற நூலாகும். அந்நூலினைத் தொகுத்த புலவர்கள் மூவேந்தருட் சேரரைப் பற்றிய பாடல்களை முன்னர் வைத்தும், ஏனைச் சோழ பாண்டியர் பாடல் களைப் பின்னர் வைத்தும் உள்ளனர். மேலும், பத்துப் பாட்டுள் ஒ ன் ற | ன சிறுபாணாற்றுப்படையுள்ளும் குட்டுவன் (சேரன்) செழியன் செம்பியன் என்னும் முறை கூறப்படுதலும் 29 கருதற்குரியதாகும். சேர மன்னர்களின் நாடும் ஊரும் வடமொழி நூல் களில் குறிப்பிடப்பட்டுள்ளன. வடமொழியில் ஆதிகாவியம் எனப்படும் வான்மீக ராமாயணத்தில், சீதாதேவியை வான ரவீரர் தேடிவரும்படி சுக்ரீவன் குறிப்பிட்டுள்ள இடங்களுள் கேரள நாடும், முரசீபத்தனமும் உரைக்கப் பட்டுள்ளன. இம் முரசீபத்தனம் மேலைக் கடற்கரை யிலுள்ள முசிறி என்னும் பட்டினமாக அறிஞர்களால் கருதப்படுகின்றது. இம் முசிறி முற்காலத்தே சுள்ளி யென்னும் பேரியாறு கடலோடு கலக்குமிடத்து விளங்கிய பெருந்துறைமுகமாகவும், .ே ச ர ர் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இருந்ததென்பதும், மேனாட்டு யவனரது மரக்கலங்கள் மிளகு முதலிய மலைநாட்டுப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்கு இம்முசிறித் துறைமுகமே அக்காலத் தில் ஏற்றதாக இருந்ததென்பதும் தமிழ் நூல்களாலும் 22 பிளினி (Pliny) முதலிய யவனாசிரியர்களின் குறிப்பு களாலும் தெரியவருகின்றன.2% SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS 20. சிறுபாணாற்றுப்படை, 49, 65, 82. 21. கிஷ்கிந்தா காண்டம்; 43ம் ஸர்க்கம் : 12 ஆம் சுலோகம். 22. அகம்; 149; 7.11. 23. Nagam Iyer, T. V. C. Manual, No1. I. P. 291.