பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மற்றொரு பழைய இதிகாசமான மகாபாரதத்தி னுள்ளும் சேரர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. பாரதப்போரில், பாண்டவர் பக்கத்தினின்று சேரமன்னர் துணைபுரிந்தனர் என்று பொதுப்பட அவ்விதிகாசம் குறிப் பிடுகின்றது. தமிழ் நூல்களில் சேரவேந்தன் போர்க் களத்தில் பொருத இரு படைகளுக்கும் உணவு வழங்கினான் என்ற செய்தி குறிப்பிடப்பெறுகின்றது. இச் செய்தி யினையே சிலப்பதிகாரமும் பேசுகின்றது. புகழ்பெற்ற மெளரிய சக்கரவர்த்தியான அசோகன் சாசனத்தில் சேரர் கேரள புத்திரர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும் அச்சாசனத்தால் அசோகனது கொற்றக் குடைக்கீழ் பாரத நாட்டின் பெரும்பகுதி அடங்கியிருந்த காலத்தும் தமிழ் நாட்டு மூவேந்தர் எம் மன்னர்க்கும் அடங்காது சுதந்தர மன்னர்களாக விளங்கினார்கள் என்பதனை அறியும் பொழுது சேர சோழ பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தரின் பெருமையினையும் வீர மேம்பாட்டினையும் விளங்கக் காணலாகும். மற்ற அரசர்களுக்கும் மாறாகச் சேர அரசர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையாக இருந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்கள் கொண்டு தெளியலாம். சேர அரசர்களில் தாயாதி அரசர்கள் கூடக் சண்டையிட்டுக் கொள்ளவில்லை.?? பழந்தமிழ் நாட்டின் எல்லையைப் புறநானூற்றுப் புலவராம் காரிக்கிழார் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். வடாஅது, பனிபடு நெடுவரை வடக்கும் தெனா அது, உருகெழு குமரியின் தெற்கும் 24. புறம்; 2 : 13.16. 25. சிலம்பு; வாழ்த்துக்காதை: ஊசல் வரி. 26. V. A. Smith’s Early History of India, P. 173. 27. மயிலை சீனி. வேங்கடசாமி-சேரன் செங்குட்டுவன், ப. 2.