பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம்பல நிகழ்தரு நனந்தலை நன்னாட்டு விழவறு பறியா முழவிமிழ் மூதூர் -இரண்டாம் பத்து 16-18, என்று குறிப்பிட்டுள்ளார். கடல்படு பொருளும் மலைபடு பொருளும், ஆற்றில் கிடைக்கக்கூடிய பொருளும் சோ நாட்டில் தட்டின்றிக் கிடைத்தன என்று இப்பாட்டில் குறிப்பிடப்பெறுகின்றது. சேரநாட்டு மகளிர் அவலை எறிந்து உலக்கையை வாழை மரத்தின் கண்ணே சா கதி வைத்து விட்டு வள்ளைப் பூக்களைப் பறிப்பதற்கு வயலில் இறங்குவார்கள் என்றும், அவ்வயல்கள் பருத்த கதிரி களினால் வளைந்துகிடக்கும் தன்மையன என்றும் பாலைக் கெளதமனார் பாடியுள்ளார். அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை கெல்லின் விளைவயல். a. --முன்றாம் பத்து; 9 : 1-3. சேரநாட்டில் எல்லாக் காலங்களிலும் கரும்பு விளை விக்கப் பெற்று, அது அறுவடை செய்யப்படுகிறது என்றும் அப்புலவர் குறிப்பிட்டுள்ளார். கால மன்றியுங் கரும்பறுத்து ஒழியாது மூன்றாம் பத்து; 10 : 14. சேரநாட்டின் விரிவினையும் வளத்தினையும், சேர மன்னன் படைப்பெருக்கத்தின் சிறப்பினையும் முத்தொள் ளாயிரப் பாடல்களும் புகழ்ந்துரைக்கின்றன. வானிற்கு வையகம் போன்றது வானத்து மீனிற் கனையார் மறமன்னர் - வானத்து மீன்சேர் மதியனையான் விண்ணுயர் கொல்லியர் கோன்சேரன் கோதையென் பான். -முத்தொள்ளாயிரம்; 15.