பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வானமளவு விரிந்த நிலப்பரப்பினையுடையது; அவனுக்கு அடங்கிய சிற்றரசர்கள் வானத்திலுள்ள விண் மீன்களை யொத்தவர்களாவர். சேர மன்னனின் தன்மை வானத்திலுள்ள திங்களையொத்ததாகும் என இப்பாடல் குறிப்பிடுகின்றது. பிறிதொரு புலவர் ஒர் அழகான காதற்காட்சியினை படம்பிடித்துக் காட்டுமுகத்தான் சேரநாட்டின் வளத் தினை நம் கண்முன் கொணர்ந்துவிடுகின்றார். குளத்தில் உள்ள செல்வாம்பல் மொக்குகள் மலர்ந்து மணம் பரப்பும் வேளையில் நெருப்பினும் மிக்க செம்மை தோன்றியது. அக்காட்சியினைக் கண்ட பறவைகள், ஏதோ தீப்பற்றி எரிகின்றது என்று எண்ணித் தம் குஞ்சு களைச் சிறகுக்குள் ஒதுக்கி வைத்துக் கொள்கின்றன. இத்தகு பறவையின் ஆரவாரம் உண்டேயொழியப் பகைவரின் ஆரவாரம் அந்நாட்டில் என்றும் எழுந்த தில்லை என்று புலவர் பாடுகின்றார். அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப்-புள்ளினங்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதை நாடு. -முத்தொள்ளாயிரம்; 13. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமானும், திரைசெய் கடலின் பெருவளமும் திருந்து கிலனின் செழுவளமும் வரைவெய் வளமும் உடன்பெருகி மல்குநாடு மலைநாடு ' என்று மலைநாட்டின் மாறா வளத்தினை மனமாரப் பாராட்டியுள்ளார். 30. பெரியபுராணம்; விறன்மிண்டநாயனார் == புராணம்: 1.