பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வி யேய்ப்பப் பூத்த முல்லைப் புகழ்சூழ் பறவை கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும் வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின் இலங்குகதிர்த் திருமணி பெறுஉம் அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. -ஏழாம் பத்து; 6:14.20. இதே முறையிலேயே அரசில் கிழார் பெருஞ்சேரல் இரும்பொறை காத்தோம்பிய நாட்டைக் கவினுறக் கிளத்தி யுள்ளார் (எட்டாம் பத்து; 5:5-14). காந்தளங்கண்ணி சூடிய செல்வக்குடியில் வந்த செல்வ மக்கள் முழவு போன்றமைந்த பெரிய பலாப்பழத்தை உண்டு விழாக் கொண்டாடியது போன்று, புதுமை சான்ற கரிய அழகிய மூங்கிற் குழாயிடத்தே பெய்து முதிர்வித்த இனிய கள்ளையருந்தி ஆரவாரிக்கின்றனர் கொல்லிமலைச் சாரலில் வாழ்வோர் என்று ஒன்பதாம் பத்துப் பேசுகின்றது (ஒன்பதாம் பத்து; 1:19-24). மழை உரிய காலத்தில் தப்பாது பொழிகிறது. ஆண்மானும் பிணைமானும் காட்டகத்தே கூடித் துள்ளி விளையாடுகின்றன. பறவைகளும் வண்டினமும் மரக் கிளை களிலிருந்து ஆரவாரிக்கின்றன. பழங்களும் கிழங்குகளும் பலரும் பலவாக உண்ணவும் குறைவுபடாதுள்ளன. பசுக் கூட்டங்கள் நல்ல புல்லை மேய்ந்து களித்துலவுகின்றன. வறுமை யறியாத வளம் பொருந்திய சிறப்பினால் சேர நாட்டில் பெரிய பலவாகிய புதுப் புதுக் கூலங்கள் பெருகிக் கிடக்கின்றன (ஒன்பதாம் பத்து; 9:1-7). வானம் பொழுதொடு சுரப்பக் கானம் தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப் புள்ளு மிஞ்று மாச்சினை யார்ப்பப் பழனுங் கிழங்கு மிசையற வறியாது