பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அலங்குளைப் புரவி ஐவரொடு சினை.இ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய். - புறம்; 2:13-16. புறநானூற்றின் பழைய உரைகாரர் இப்பகுதிக்குப் பின் வருமாறு உரை கண்டுள்ளார்:

  • அசைந்த தலையாட்டமணிந்த குதிரையையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொரு போர்களத்தின்கட் படுத் துணையும் பெருஞ்சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்'.

இவ்வுரைகாரர் கூற்றையே உண்மையெனக் கொண்டு சிலர் இச்சேரவேந்தன் பாரத காலத்தவன் என்றும், பாரத வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளித்தவன் இவனே என்றும், இவன் கொடைச்செயலைச் சிறப்பித்துப் பாடிய முரஞ்சியூர் முடிநாகராயரும் பாரத காலத்தவர் என்றும் கருத்துக்கொள்ளலாயினர். அறிஞர் சிலர், செங் குட்டுவன் பாட்டனாகிய உதியஞ் சேரலாதன் பாரத காலத்தவனாதற்கு இயைபின்மையால், பெருஞ்சோற்று தியன் வேறு, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய தந்தையும், செங்குட்டுவனுடைய பாட்டனுமாகிய உதியஞ் சேரல் வேறு என்றும், துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை -அகம்; 233; 7-9. 33. திரு. மு. இராகவையங்கார், சேரவேந்தர் செய்யுட்கோவை, ப. IX. * . . . . . .