பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B4 இரண்டாம் பத்தினைப் பாடியுள்ளார். இம்மன்னனுக்கு மனைவியர் இருவர். ஒருத்தி வேள் ஆவிக் கோமான் பதுமன் தேவி என்பவளாவள். இவளுடைய தங்கையை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் தாயாதித் தம்பி யாகிய செல்லக் கடுங்கோ வாழியாதன் மணஞ் செய்திருந் தான். அவளுடைய பெயரும் வேளாவிக் கோமான் பதுமன்தேவி என்பது எட்டாம் பத்தின் பதிகத்தால் அறியப் படுகின்றது. செல்வக் கடுங்கோ வரிழியாதன் பொறையன் மரபினைச் சேர்ந்தவன் என்பதும், இவனுடைய தந்தை அந்துவன் பொறையன் என்பதும் அறியப்படுகின்றன. போர்ச் செயல்கள் சேரநாட்டுக்கு வடமேற்கே மேற்கடலில்-கொண்கான நாட்டுக் கடற்கரையை அடுத்த தீவுகளில் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த கடம்பர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களைத் துளு நாட்டுக்கு அடங்கிய குறும்பர்கள் என்றும் கூறுவர். இவர்கள் சேரநாட்டுத் துறைமுகங்களை நோக்கி வணிகப் பொருள்களை ஏற்றிக் கொண்டுவந்த யவனக் கப்பல்களையும் பிற நாட்டுக் கப்பல்களையும் இடைமறித்துத் தடுத்துக் கொள்ளையிட்டு வந்தனர். கி. பி. 80 இல் வாழ்ந்திருந்த பிளினி (Pliny) என்னும் யவனர் தாம் எழுதியிருக்கும் யவன வாணிகக் குறிப்பிலிருந்து மேலே கண்ட செய்தி உண்மையெனத் தெரிகின்றது. இதனால் சேரநாட்டின் வாணிபவளம் பாதிக்கப்பட்டது. எனவே நெடுஞ்சேரலாதன் ஒரு பலம் வாய்ந்த கப்பற்படையினைச் செலுத்திக் கடற்குறும்பு செய்த கடம்பரைவென்று, அவர்தம் காவல் மரத்தையும் தடிந்து வந்தான். கடலகத்தே மாமரத்தைக் காவன் மரமாகக் கொண்டிருந்த சூரனை வேலாயுதத்தால் வென்ற முருகப் பெருமானின் வெற்றிக்கு உவமையாக 42. மயிலை சீனி.வேங்கடசாமி, சேரன் செங்குட்டு வன், ப. 8. --