பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் ப ா டு ம் குமட்டுர்க் கண்ணனார் அவன் ஆரிய அரசர்கள் சிலரை வென்றதாகவும் பாடியுள்ளார். பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்துப் பதிகமும், பேரிசை மரபின் ஆரியர் வணக்கி என்று குறிப்பிடுகின்றது. ஆனால் அவ் ஆரிய அரசர்கள் இன்னார் என்பது தெரியவரவில்லை. தமிழ்நாட்டு எல்லைக்கு வடக்கில் இருந்த தெலுங்கரையும் கன்னடத் தினரையும் வடுகர், வடவர் எனத் தமிழர் அந்நாட்களில் குறித்தனர். இவ்விரு மொழி பேசுவோர் வாழ்ந்த பகுதி களுக்கு அப்பாலே இருந்த மக்களை ஆரியர்' என்று சங்க கால மக்கள் வழங்கினர். தக்காணப் பகுதிகளை ஆண்ட சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) என்னும் மன்னர்களோடு சேர அரசர்கள் நல்ல நட்புறவு கொண்டிருந்தனர் என்பது, சேரன் செங்குட்டுவனுக்கு அவர்கள் அவனுடைய வட நாட்டுப் படையெடுப்பினுக்குக் கங்கைப் பேரியாறு கடத்தற்கும், இமயமலையில் பத்தினிக் கடவுட்குரிய படிமம் சமைத் தற்குரிய கல் எடுத்தற்கும் துணையாக விளங்கியமை கொண்டு அறியலாம். எனவே அக்காலத்தே வடநாட்டில் ஆண்ட சிற்றரசரான ஆரிய மன்னர்கள் சிலரை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வெற்றிகொண் டான் என்று கொள்வதே அமைவுடைத்தாகும். ஆரிய அரசர்களை அமர்க்களத்தே வென்று அதற்கு அடையாளமாக இவன் தன்னுடைய விற்கொடியினைத் தன் வீர மேம்பாடு தோன்ற இமயமலையிற் பொறித்தான் என்பது மாமூலனாரும் பரணரும் பாடியுள்ள அகநானூற்றுப் பாடல்கள் வழிப் புலனாகின்றன. வலம்படு முரசிற் சேர லாதன் முந்நீ ரோட்டிக் கடம்பறுத் திமயத்து. முன்னோர் மருள வணங்குவிற் பொறித்து. -அகம்; 127:3.5.