பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தலைப்பெய்து கைபிற் கொளிஇ யென்பதற்கு, அக்காலத்துத் தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து கையைப் பிறகு பிணித்தென்றுரைக்க. அருவிலை நன்கலம் வயிரெமாடு கொண்டென்றது அந்த யவனரைப் பின்தண்டமாக அருவிலை நன்கலமும் வயிரமுங் கொண்டென்றவாறு.' பதிகத்தில் வரும் இச்செய்தி இரண்டாம் பத்தின் பத்துப்பாடல்களில் ஒரு பாடலிலேனும் காணப்படாமை யால் குமட்டுர்க் கண்ணனார் 2ஆம் பத்துப் பாடிய பிறகு, இமயவரம்பன் யவனரோடு தொடுத்த போர் நடை பெற்றிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். இவ் யவனர் தக்காணத்து மேற்குக் கரைப் பக்கமாகச் சில ஊர்களை அரசாண்டிருந்த யவனர் என்பர் வரலாற்றாராய்ச்சி யாளர்.43 மேலும், தக்காணத்தின் விந்தியப் பிரதேசத்தில் இந்தச் சாகயவன அரசர்கள் ஆட்சி நடத்தினர் என்றும், இவர்களுக்கும் சதகர்ணி அரசர்களுக்கும் போர் ஏற்பட்டது என்றும், அப்போரில் தம் நட்பினரான சதகர்ணி அரசர்கள் பக்கம் நின்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் உதவினான் என்றும், இதனையே ஒன்பதாம் பத்து இளஞ்ரேல் இரும்பொறையின் முன்னோன் செயலாகக் குறிப்பிடுகின்றது என்றும் கூறுவர். சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினத்தில் குடியேறியிருந்த யவனரை நெடுஞ்சேரலாதன் வென்றான் என்றும் ஆராய்ச்சியாளர் ஒலர் குறிப்பிட்டுள்ளனர். இக்கருத்து தவறு என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி தம் ஆராய்ச்சி நூலான 43. மயிலை சீனி. வேங்கடசாமி, சேரன் செங்குட்டு வன், ப. 11. 44. 9:2–16. 45. K. N. Sivaraja Pillai, The Choronology of Early Tamils, P. 117.