பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 பல்யானைச் செல்கெழு குட்டுவன், பா ைல ச் கெளதமனாரும் அவர் பார்ப்பணியும் சுவர்க்கம் புக யாகத் தி வேட்டு உதவியதனைக் கேள்வியுற்ற சோழ நாட்டு அந்தணனாகிய பராசரன் என்பான், இச்சேர மன்னன் அவைக்களம் போந்து, வேள்வி இயற்றி வேதம் ஒதி வெற்றி கொண்டு பார்ப்பன வாகை பெற்றதோடு சேர வேந்தனால் நல்கலன்களும் நல்கப் பெற்றான் என்று: சிலப்பதிகாரங்கொண்டு தெளியலாம். குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேல் சேரலற் காண்கெனக் காடும் நாடும் ஊரும் போகி நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும் அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க நாவலங் கொண்டு கண்ணார் ஒட்டிப் பார்ப்பன வாகை சூடி யேற்புற நன்கலங் கொண்டு தன்பதி பெயர்வோன் ட சிலம்பு; 23:62-73. இவன் இருபத்தைந்து ஆண்டு ஆட்சி செய்தான் என்றும், நெடும்பாரதாயனார் என்னும் இவனுடைய அரசவைப் புரோகிதர் இல்வாழ்க்கையைத் துறந்து தவஞ் செய்யக் காடு சென்றபோது இவ்வரசனும் மண்ணரசையும் மனைவியையும் துறந்து காட்டுக்குச் சென்றான் என்றும் பதிகங்கொண்டும், பதிகத்தின் அடிக்குறிப்பு கொண்டும் பழைய உரைகாரரின் விளக்கம் கொண்டும் அறிகிறோம். பதிகத்தின் பகுதி வருமாறு : ஒடுங்கா கல்லிசை யுயர்ந்த கேள்வி நெடும்பார தாயனார் முந்துறக் காடுபோந்த பல்யானைச் செல்கெழு குட்டுவன்.