பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் குட நாட்டை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆட்சி செய்த காலையில் குட்டநாட்டிற்குத் தென்கிழக்கில் அமைந்திருந்த குன்றநாட்டுக் காவலை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் முதல் மனைவி பதுமன் தேவி வயிற்றில் பிறந்த மகன் நார்முடிச்சேரல் மேற்கொண் டிருந்தான். இக்குன்ற நாட்டுப் பகுதியில் வண்டன் என்னும் பழையோன் வழிவந்தவரும், முதியர் இனத்த வரும் வாழ்ந்து வத்தனர். அவர்கள் இவன்பால் பேரன்பு பூண்டொழுகினர். அந்நாளில், குடநாட்டின் வடக்கில் இருந்த பகுதி கொண்கான நாடு என வழங்கப்பட்டது. அக்கொண் கானத்தின் வடபகுதி துளுநாடு என்றும், கீழ்ப்பகுதி புன்னாடு என்றும் வழங்கின. கொண்கானப் பகுதியினை நன்னன் என்னும் வேள்புல வேந்தனும், புன்னாட்டுப் பகுதியினைக் கங்கன் என்பவனும், புன்னாட்டிற்குத் தெற்கில் உள்ள பகுதியினைக் கட்டி என்பவனும், அதற்கும் தெற்கில் அமைந்திருந்த பகுதியினைப் புன்றுறை என்பவனும் ஆட்சி செய்து வந்தனர். நன்னன் வழிவந்தோர், நன்னன் வேண்மான்,' நன்னன் ஆஅய், நன்னன் சேய் நன்னன் ஏற்றை: என்று சான்றோர்களால் நூல்களில் வழங்கப் பெறு கின்றனர். நன்னன் வேண்மான் துளுநாட்டு வியலூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டான். நன்னன் ஆசாய், பிரம்பு என்னும் ஊரினைக் கோநகராகக் கொண்டு அரசாண்டான். நன்னன் சேய் தற்போது வ ட ா ர் க் கா டு மாவட்டத்தில் திருவண்ணாமலைக்கு 50. அகம்: 97: 2. 51. அகம், 366. 52. மலைபடுகடாம்; 87. 53. அகம், 44.