பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பாண்டிநாடு ஆகிய இந்நாடுகளில் இவர்கள் பெரும் பான்மையும் வாழ்ந்தனர் என்றும், இவர்கள் எப்பகுதி யிலும் நிலை பெறத் தங்கி, நாடு வகுத்து நல்லரசு காண வில்லை என்றும் அறிஞர் ஆய்ந்து கூறுவர்.' களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என இம்மன்ன னுக்குப் பெயர் வந்த காரணத்தைப் பதிற்றுப்பத்தில் பழையவுரை காரர் பின்வருமாறு கூறுவர்: களங்காய்க் கண்ணி நார்முடியென்றது களங்காயாற் செய்த கண்ணியும் நாராற் செய்த முடியுமென்றவாறு. தான் முடிசூடுகின்ற காலத்து ஒரு காரணத்தால் முடித் தற்குத்தக்க கண்ணியும் முடியும் உதவாமையிற் களங்கா யால் கண்ணியும் நாரால் முடியும் செய்துகொள்ளப்பட்டன வென்றவாறு : o இதற்குரிய காரணமாகப் பின்வரும் செய்தியினை மகாவித்துவான் மு. இராகவையங்கார் குறிப்பர்.

  • முடிசூடுகின்ற சமயத்தில் முடித்தற்குரிய கண்ணியும் கிரீடமும் பகைவர் கவர்ந்ததனால் உதவாமை பற்றி, அவற்றுக்குப் பிரதியாகக் களங்காயாற் கண்ணியும் நாரால் முடியுஞ் செய்து புனைந்துகொண்டு பட்டம் பெற்றமையின் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்" என்னும் பெயர் பெற்றான்.

இக்காரணத்தை வரலாற்றறிஞரான திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி மறுக்கிறார். இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியும் உடன்று போர் செய்து போர்க்களத்துப் புண் 58. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பண்டை நாளைச் சேரமன்னர் வரலாறு, ப. 128. 59. சேரன் செங்குட்டுவன், ப. 12 & 13. 60. A comprehensive History of India, Vol IV P. 521 foot note.