பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 பட்டு உயிர் நீங்காது சின்னாள் கிடந்தமையின் போர்க் களத்தே அம்முடியும் கண்ணியும் சிதைந்தோ கெட்டுப் போயோ இருக்க வேண்டும் என்றும், முடிசூட்டுவிழா திடீரென்று நடைபெற்ற காரணத்தால் அச்சமயத்துக்கு வாய்ப்பாக களங்காயாற் கண்ணியும், நாரினால் முடியும் புனைந்து முடிசூடிக் கொண்டான் என்றும், அதுவே இவனுக்கு இப்பெயர் வரக் காரணமும் ஆகும் என்றும் கூறுவர். ஆராய்ச்சி அறிஞர். இவன் பிற்காலத்தே நவமணிகள் பதித்து முத்துவடங்கள் நிறைந்த நல்ல முடி யினை அணி பெறச் சூடியிருந்தான் என்பதைப் பின்வரும் பாடற்பகுதி உணர்த்துதல் காண்க: இலங்குமணி மிடைந்த பசும்பொற் படலத்து அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச் சீர்மிகு முத்தந் தைஇய நார்முடிச் சேரல். -நான்காம் பத்து; 9: 14.17. சேரநாட்டினைச் சிறப்புற ஆண்ட இம்மன்னன் அந் நாட்டோடு ஒட்டிய கொங்கு நாட்டுப் பகுதிகள் சில வற்றைக் கைப்பற்றித் தன் ஆட்சிப் பரப்பை அகலப்படுத்தி யதன் காரணமாக அழுக்காறு கொண்ட கொங்குநாட்டுத் தகடுர் மன்னனாகிய நெடுமிடல் எழினி என்பான் பாண்டி யரிடம் படை உதவிபெற்று இச்சேரவேந்தனைச் செருக் களத்தே செயிர்த்தெதிர்த்தனன். நெடுமிடல் எழினி இப்போரில் தோற்றுப் போனான். நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப் பெருமலை யானையொடு புலங்கெட இறுத்து. -நான்காம் பத்து; 2 : 10-11. அடுத்து நார்முடிச் சேரல் மேற்கொண்ட போர் துளு நாட்டு நன்னன் மேலதாகும். சேரநாட்டின் வடபகுதி யிலிருந்த பூழிநாட்டையும் கொங்குநாட்டின் வடக்குப் 61. மயிலை சினி. வேங்கடசாமி, சேரன் -

  • . . . செங்குட்டுவன், ப. 210.