பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 வலம்படு கொற்றங் தந்த வாய்வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இழந்தநாடு தந்தன்ன வளம். -அகம் ; 199: 18.24. இவ்வெற்றிக்குப் பின்னர் நன்னன் வழிவந்தோர் சேர வேந்தரின் அரசாணையை ஏற்று அவருக்குக் கீழடங்கித் துளுநாட்டை ஆண்டனர். அதனால் நன்னன் உதியன்' என்ற பெயரும் அவருக்கு வழங்கிற்று. நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஓம்பினர் வைத்தபொன் -அகம் : 258: 1-3. என்ற பரணரின் அகப்பாட்டு இக்கருத்தினை வலியுறுத்தல் காண்க. களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் மீது நான்காம் பத்துப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் ஆவர். இவர் இதற்காகப் பெற்ற பரிசில் நாற்பது நூறாயிரம் பொன்னும் மன்னன் ஆள்வதில் ஒரு பாகமுமாகும். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தைந்து ஆண்டுகள் அரசு புரிந்தான். சேரன் செங்குட்டுவன் சங்ககாலச் சேர மன்னர்களுள் சேரன் செங்குட்டுவனே வீரமும் ஆற்றலும் புகழும் சிறப்பும் மிக்கோனாக விளங்கு கின்றான். தென்னாட்டு அசோகன் என்றும் இவனை ஒர் ஆசிரியர் புகழ்கின்றார். இமயவரம்பனுக்கு வேளா விக்கோ பதுமன் தேவி என்னும் மனைவி வயிற்றில் பிறந்த மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலுக்குப் பிறகு, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனனின் மற்றொரு மனைவி யாகிய சோழன் மணக்கிள்ளியின் மகனான செங்குட்டுவன் -- 62. திரு மு. இராகவையங்கார், சேரன் செங்குட்டுவன், ப. 198. சே. செ. இ-4