பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 செங்குட்டுவன்தான் முதல்முதல் கடற்போர் செய்தான், அவனுக்கு முன்பு கடற்போர் செய்தவர் இலர் என்று கூறுகிறபடியினாலே செங்குட்டுவன் இந்தக் கடற்போரைத் தன் தந்தை ஏவியபடி செய்தான் என்பது தெரிகின்றது . என ஆராய்ச்சி அறிஞர் திரு மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிடுகின்றார். இக் கருத்தைப் பின்வரும் இரண்டாம் பத்துப் பாட்டு வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். பலர்மொசிங் தோம்பிய திரள்பூங் கடம்பின் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய் வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர் நாரறி நறவின் ஆர மார்பின் போரடு தானைச் சேரலாத. m -இரண்டாம் பத்து , 1 : 12.16. இப்பாட்டில் கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்' என வருவதனால் தந்தை ஏவ மகன் போர் உடற்றினான் என்பது அறியப்படுகின்றது. தந்தையும் மகனும் ஆற்றிய போராதலின் கடம்பறுத்த செயல் இருவர் மேலும் கூறப் படுகிறது. சிலப்பதிகாரம், கடந்தடுதார்ச் சேரன் கடம்பெறிந்த வார்த்தை படர்ந்தகிலம் போர்த்த பாடலோ பாடல் -சிலம்பு ; 2 9: வள்ளைப்பாட்டு 3. என்றும், பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக் கங்கைப் பேரியாற் றுக்கரை போகிய செங்குட் டுவன் -சிலம்பு : 30, கட்டுரை 12-14 என்றும் செங்குட்டுவன் ஆற்றிய கடற்போரினைக் குறிப்பிடு கின்றது. மேலும் சிலப்பதிகார ஊசல் வரியும் அவன் கடற்போர்ப் புகழைச் சிறப்பித்துரைக்கின்றது. 64. சேரன் செங்குட்டுவன், ப. 26 & 27.