பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 முரசுசெய முரற்சிக் களிறுபல பூட்டி ஒழுகை புய்த்தோய் கொழுவில் பைந்துணி -ஐந்தாம் பத்து; 4 : 10-17. எனறும , வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து மொய்வளம் செருக்கி மொசிங்துவரு மோகூர் வலம்படு குழுஉங்லை அதிர மண்டி படுபிணம் பிறங்கப் பாழ்பல செய்து படுகண் முரசம் நடுவட் சிலைப்ப வளனற நிகழ்ந்து வாழுநர் பலர்படக் கருஞ்சினை விறல்வேம் பறுத்த பெருஞ்சினக் குட்டுவன் -ஐந்தாம் பத்து; 9 : 7-17. என்றும் பரணர் குறிப்பிடுகிறார். - பழையன் காக்கும் கருஞ்சினை வேம்பின் முழாரை முழுமுதல் துமியப் பண்ணி வாலிழை கழிந்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தல் முரற்சியால் குஞ்சர ஒழுகை பூட்டி என்று ஐந்தாம் பத்தின் பதிகம் குறிப்பிடுகின்றது. சிலப் பதிகாரத்திலும் இம்மோகூர் வெற்றி பேசப்பட்டுள்ளது. பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு வேம்புமுதல் தடிந்த ஏங்துவாள் வலத்துப் போந்தைக் கண்ணி பொறைய. -சிலம்பு; 27 : 124.126. இப்போரில் மோகூர் மன்னன் பழையனுக்குத் துணை யாகச் சோழ பாண்டிய வேந்தர்களும், வீரத்தில் மேம்பட்ட வேளிர் சிலரும் பங்கு கொண்டனர் என்பதும் தெரிய வருகின்றது.