பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 செய்யக் கல் எடுக்கச் சென்றபோது நடந்ததென்றும் கூறுவர். 66 - கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எங்கோ மகளை யாட்டிய அங்காள் ஆரிய மன்னர் ஈரைஞ் நூற்றுவர்க் கொருநீ யாகிய செருவெங் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கட் கூற்றம் -சிலம்பு; காட்சி. 160.165. என்ற அடிகளில் சுட்டப்படுவது முதற்போர் என்றும், கனகவிசயரை வென்றது பிறிதொரு போர் என்றும் கூறுவர். வடநாட்டு வெற்றியினை ஐந்தாம் பத்தின் பதிகம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி. பதிகத்தில் காணும் இச்செய்தி பதிற்றுப்பத்தில் காணப் படவில்லை. காரணம். ஐந்தாம் பத்துப் பாடிய பரணர் காலத்திற்குப் பின்னரே இவ்வடநாட்டுப் போர் நிகழ்ந் திருக்க வேண்டும். எனவே அச்செய்தி பதிற்றுப்பத்தில் விடுபட்டதாகலாம். ஐந்தாம் பத்துப் பாடியமைக் காகப் பரணர்க்குச் செங்குட்டுவன் தன் மகன் குட்டுவன் சேரலைப் பரிசாகக் கொடுத்தான் எனக் கூறுகிறது பதிகம். இதன் பொருள் பரணருக்கு மாணவனாகக் குருகுலவாசம் செய்யக் கொடுத்தான் என்பதேயாகும். இதனால் குட்டுவன் சேரலுக்குப் பரணர் கல்வி புகட்டினார் என்பது தெரிய - 66. மயிலை சினி. வேங்கடசாமி, சேரன் செங்குட்டுவன், ப. 35.