பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நூலின் முதல் இயலான பதிற்றுப்பத்து' என்னும் முதல் பகுதியில் சேரமன்னர்களின் அரசியல் வரலாறு, சேரர் அரசாட்சி முறை, சேரர் கொடை வளம், பதிற்றுப் பத்து காட்டும் சமுதாய வாழ்க்கை, பதிற்றுப்பத்தின் இலக்கிய நயம் ஆகியன சிறப்பாக ஆராயப்பெற்றுள்ளன. முதற்கண் சேரவேந்தரின் தொன்மையைத் தக்க சான்று களுடன் நிறுவி, பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் பல்யானைச் செல்கெழு குட்டுவன், களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், சேரன் செங்குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக் கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை முதலாய சேர அரசர்களின் வரலாற்றினை, அரசியல் பின்னணியோடு ஆசிரியர் எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்தம் அரசநீதி, பண்பு நலம் முதலியனவற்றை நன்கு அறியுமாறு உரிய எடுத்துக் காட்டுகளுடன் இனிய நடையில் விளக்கியுள்ளார். விரத்தின் விளைநிலமாகக் திகழ்ந்த அரசர்கள் ஈரத்தின் பிறப்பிடமாகவும் திகழ்ந்து, வந்தோர்க்குக் கொடை நல்கும் இனிய பண்பாளர்களாகத் திகழ்ந்தார்கள் என்பதையும் அவர்களுடைய வரலாற்றால் அறிய முடிகின்றது. இரண்டாம் பகுதியில் எட்டுத்தொகை நூல்கள் ஆராயப்பெறுகின்றன. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்கள் சேரநாட்டுத் தொடர்புடைய செய்திகளை எங்ங்னம் விவரிக்கின்றன என்பதை இப்பகுதியில் ஆராய்ந்து கூறுவர். சேரனின் தொண்டி, மாந்தை முதலான சங்ககால வரலாற்றுப்புகழ்மிக்க நகரங்களின் குறிப்புகள் எடுத்துக்காட்டப்பெற்றுள்ளன. மூவன் என்னும் குறுநில மன்னனின் வலிமையை அடக்கி அவனுடைய பற்களைப் பிடுங்கித் தன்னுடைய கோட்டைக் கதவில் பதித்த சேரமான் கணைக்கால் இரும்பொறையின் வீரச் செயலும் டி