பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வருகின்றது. பரணர் உம்பர்காட்டு வாரியைப் பரிசிலாகப் பெற்றார் என்பதும் அறியப்படுகிறது. செங்குட்டுவன் ஐம்பத்தைந்து ஆண்டு வீற்றிருந்த தாகப் பதிகம் குறிப்பிடுகின்றது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் ஆவன். இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு வேளாவிப் பதுமன்தேவி ஈன்ற மக்கள் இருவருள் இவன் இளையவன். நெடுஞ்சேரலாதனின் மற்றொரு மனைவியாகிய சோழன் மணக்கிள்ளியின் மகள் நற்சோணையின் மூத்த மகன் செங்குட்டுவனுக்கும் இவன் இளையோனாக இருந்திருக்க வேண்டும். எனவே இவன் தன் தமையனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலுக்கும் செங்குட்டுவனுக்கும் பின்னர்ச் சேரநாட்டு ஆட்சியைப் பெற்றான். அக்காலத்தில் தொண்டை நாட்டிற்கும் கொண்கான நாட்டிற்கும் இடைப்பகுதி தண்டாரணியம் எனப்பட்டது. அப்பகுதியினைப் புரந்துவந்த மன்னர்கட்கும் சேரர்க்கும் இடையே ஏற்பட்ட பகைமை காரணமாக இவன் அந்நாட்டின் மீது படையெடுத்துச் சென்று வெட்சிப் போர் செய்து அந்நாட்டின் ஆநிரைகளைக் கவர்ந்தான். பின் அவற்றைத் தன் நாட்டுக்கு ஒட்டி வந்து, தன் நாட்டுத் தொண்டி நகர்க்கண் நிறுத்தி, வெட்சிப் போர் விளைவித்து வெற்றி தேடித் தந்த வீர மறவர்களுக்கும் ஒற்றுரைத்த ஒற்றர்களுக்கும், கணி சொன்ன கணியர்களுக்கும் பாதீடு செய்தான். தண்டாரணியத்திலிருந்து கொண்டுவந்த கால் நடைச் செல்வங்களுள் ஆடுகளே மிக்கிருந்தமையின் இவனுக்கு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இதனைப் பதிகம்,