பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழ்நாடு புகுந்து குறும்பு செய்யத் தலைப்பட்டபோது, கடுங்கோ வேந்தன் சோழ பாண்டியர்க்கு இச்செய்தியினை அறிவித்து, அதன்வழி அவ் விருவர்தம் படைகள் வரவும், தானும் படைகொண்டு சென்று சேரவாறு கடந்து வானவாசி நாட்டுட் புகுந்து சதகன்னர்க்குரிய நகர் ஒன்றை முற்றுகையிட்டுப் பகைவர் பயந்து சிதறியோட வெற்றி பெற்றான். இவ்வெற்றியைக் கபிலர், ஒருமுற்று இருவர் ஒட்டிய ஒள்வாள் செருமிகு தானை' என்று பாராட்டினார். ஏழாம் பத்தின் பதிகம், நாடுபதி படுத்து நண்ணா ரோட்டி வெருவரு தானைகொடு செருப்பல கடந்து செல்வக் கடுங்கோ வாழியாதன் சிறப்புற்றான் என்று குறிப்பிடுகின்றது. இவனுடைய படை வலிமைமிக்கதாயிருந்து, உழிஞைப் போர் இயற்றி மதிலைக் கைப்பற்றுவதில் வல்லதா யிருந்தது. இந்த மதிலை எறிந்து கைப்பற்றிய பின்னன்றி உணவு கொள்வதில்லை என்று உணவு சமைத்தற்குரிய கலன்களை மதிலினுள் இட்ட படைவீரர் பலர் இவன் படையில் இருந்தனர். மறத்துறையில் மேம்பட்டிருந்த இவன் அறத்துறை யினும் மேம்பட்டிருந்தான். களவேள்வி இயற்றியது போன்றே மறைவேள்வியும் பல இயற்றி அந்தணர் ஒம்பினான் (70: 17-19). திருமால்பால் பெரும் பக்தி செலுத்திய இவன் திருமால் கோயில் வழிபாட்டுக்கென நெல்வளம் நிறைந்த ஒகந்துார் என்னும் ஊரினை இறையிலி முற்றுாட்டாக வழங்கினான் (பதிகம்). ஈத்தற்கு இரங்காது ஈயுந்தொறும் இன்பமே கொண்ட இவ்வேந்தன் கபிலர்க்கு நன்றா என்னும் குன்றேறி நின்று. 77. பதிற்றுப்பத்து; 63: 11.12. 78. பதிற்றுப்பத்து; 68.