பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத் தான். இந்நன்றா இன்று நணா என்று மருவி பவானி என்று வழங்குகின்றது. - இருபத்தைந்தாண்டு அரசு வீற்றிருந்த இவன் படை கொண்டு ஒரு போரில் பாண்டிய மன்னனுக்குத் துணை சென்றபோது சிக்கல் என்ற இடத்தில் நடந்த போரில் பகைவர் இட்ட வேல் இவன் மார்பில் தைத்துப் பெரும் புண்ணை உண்டாக்கியது. அப்புண் விழுப்புண்ணாய் புகழ்ப் புண்ணாயிற்று. அங்கேயே அவன் பள்ளிப்படுக்கப் பட்டதனால், இவனைப் பின்வந்த புலவர்கள் சிக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ ாழியாதன் என வழங்கினர். இப்போது இராமநாதபுர மாவட்டம் உத்தர கோச மங்கைப் பகுதியில் அவ்வூர் உளது. தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை சேரலாதன் கைப்பற்றிய கொங்கு நாடு முல்லை வளம் சிறந்திருந்தமையின் ஆநிரைகளும் ஆடுகளும் ஆன கால்நடைச் செல்வம் அந்நாட்டில் மிகுந்திருந்தது. புலவர் கொங்குநாட்டுக் குடிமக்களை ஆகெழு கொங்கர்’ என்றும் பாராட்டியுரைப்பாராயினர். இக்கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது அதியமான் எழினியின் நாடாகும். தற்காலம் தருமபுரி என வழங்கப்படும் நகரமே அந் நாளில் தகடூர் என வழங்கப்பட்டது. முன்பு அதியமான் கோட்டை என வழங்கப்பட்ட இடமே இன்று அதமன் கோட்டை என வழங்கப்படுகிறது. பெருஞ்சேரல் இரும்பொறை பொறையர் மரபினன்; செல்வக் கடுங்கோ வாழியாதனின் மைந்தனாவன். நார்முடிச் சேரல் காலத்திலும் இவன் இருந்தவனாவன். இவன் காலத்தில் சேரவாதிக்கம் தகடூர் வரையில் பரவி யிருந்தது. அக்காலத்துக் கொங்கு நாட்டை ஆண்டவன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆவன். இவன் அதியமான் நெடுமிடல் அஞ்சியின் மகனாவன். நெடுமிடல் வஞ்சி, சேரன் சே. செ. இ.5