பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலால் போரில் தோற் கடிக்கப்பட்டவனாவன். பின்னர் அதியமான் நெடுமிடல் அஞ்சி துளுநாட்டு நன்னனுடன் போர் செய்து தோற்றான். போரிலும் இறந்துபட்டான். இதன் பின்னர்ப் பட்டத் திற்கு வந்தவனே அதியமான் நெடுமான் அஞ்சி எனப்படு பவன். இவனுக்கு உரிய தகடுரின்மீது பெருஞ்சேரல் இரும்பொறை படையெடுத்துச் சென்றான். இதற்குரிய காரணம் சரியாக விளங்கவில்லையெனினும், அதியமான் நெடுமான் அஞ்சி சேரர் ஆதிக்கம் சிறிது சிறிதாகப் பரந்து விரிந்து கொங்குநாடு முழுவதனையும் அகப்படுத்திக் கொண்டது என்கின்ற எண்ணம் ஏற்பட்டதன் விளைவாக இருக்கலாம். கொங்குநாடு முழுதும் எங்கே சேரர் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடப் போகிறதோ என்று அஞ்சி னான். எனவே, சேரர் செல்வாக்கைக் குலைக்கவேண்டும் என்று எண்ணங்கொண்டு அதனைச் செயல்படுத்தவும் தொடங்கினான். தனக்குத் துணையாகக் கொங்கு நாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த ஆயர்குலத் தலைவர் சிலரையும், கொங்குநாட்டு வேளிர் சிலரையும் திரட்டத் தலைப்பட்டான். கழுவுள் என்னும் ஆயர்குலத் தலைவன்: இக்கலில் செல்வக் கடுங்கோ வாழியாதன் இறந்த பின்னர் அச்ச உணர்ச்சி அறவே அற்றவனாய் முன்னர்த் தனக்கு உரியதாகவிருந்த கொல்லிக் கூற்றத்தை வேளிர் சிலர் உதவியுடன் தனதாக்கிக் கொண்டு, காவிரியின் வடகரைப் பகுதியில் தங்கி வாழ்வானாயினன். இச்செய்தி கொங்கு வஞ்சியாகிய தாராபுரத்திலிருந்து சேர மன்னர் சார்பில் செங்கோல் செலுத்திய சேரர் தலைவன் அறிந்து செல்வக் கடுங்கோவிற்குப் பின் அரசு கட்டிலில் அமர்ந்த பெருஞ் சேரல் இரும்பொறைக்கு அறிவித்தான். இரும்பொறை பெரும்படையொன்றை ஆயத்தப்படுத்திக் கொல்லிக் கற்றத்தின் மேல் படையெடுத்துச் சென்றான். சேரனின் படை பலத்தையும் பெருமையையும் கண்ட வேளிர் சிலர் சேரமான் பக்கம் சேர்ந்தனர். எனவே கழுவுள் சேர