பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 எடுத்துக்காட்டப்பெற்றுள்ளது. சேரனின் வஞ்சியில் கொங்குநாட்டினர் மணிகளை இடையில் கட்டிக்கொண்டு தெருவில் ஆடும் உள்ளிவிழா பற்றிய குறிப்புகள், பிற விழாக்கள் பற்றிய குறிப்புகள் முதலாயின படிப்போர்க்குச் சுவை நல்கும் பான்மையன. பழந்தமிழரின் வாழ்க்கை முறையை அறிய விழைவார்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்பது உறுதி. அகநானூற்றில் சேரர்களைப் பற்றி அறுபத்திரண்டு பாடல்கள் உள்ளதாக ஆசிரியர் கூறுவர். இவற்றுள் பாலைத்திணையைப்பற்றிய பாடல்களே மிகுதியானதாகும் என்பர். வரலாற்றுக் களஞ்சியமான அகநானூறு ஒன்று மொழிக்கோசர் என்பாரின் பண்பு நலன்களை எடுத் துரைப்பதாக அமைந்துள்ளது. ஆதிமந்தியின் வரலாறு, சேரனுடைய கொல்லிமலை, அண்டினாரைக் கொல்லும் பாவையின் தன்மை முதலானவை குறித்த செய்திகள் குறிப்பிடத்தகுந்தன. இயற்கைக் காட்சிகளின் அழகிய வருணனைகள் இவ்விலக்கியங்களில் எங்ங்னம் அமைந்து விளங்குகின்றன என்பதனையும் ஆசிரியர் இந்நூலுள் சுவைபடக் கூறுகின்றார். இரண்டாம் இயலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல் களில் ஒன்றான களவழி நாற்பதினைப் பொய்கையார் என்னும் புலவர் பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுவித் தார் என்னும், வரலாற்றுச் செய்தி குறித்து ஆராயப் பெற்றுள்ளது. மூன்றாம் இயல் சேரநாட்டுக் காப்பியங்களைப் பற்றிய தாகும். சிலப்பதிகாரம் காட்டும் அரசியல், சமுதாய வரலாறுகள் அக்காலச் சூழலில் எங்ங்னம் விளங்கின என்பது குறித்து ஆசிரியர் விரிவாக ஆராய்ந்துள்ளார். தந்தைக்குப் பின் அவனுடைய மூத்தமகன் முடி சூடும் மக்கள் தாயக் கொள்கையே சிலப்பதிகார காலத்தில் நிலை பெற்றிருந்தது என்றும், மருமக்கள் தாயக்கொள்கை அந்