பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தகடூர்ப் போர் குறித்துத் தகடுர் யாத்திரை என்றொரு நூல் இயற்றப்பட்டது. அந்நூல் இன்று முழுதும் கிடைக்காமல், நூலின் சில செய்யுட்களே தொல் காப்பியப் புறத்திணையியலின் உரையில் நச்சினார்க் கினியர் மேற்கோளாகக் குறிப்பிடும் போக்கில் காணப்படு: கின்றன. புறத்திரட்டிலும் ஒரு சில செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவன் பல யாகங்களைச் செய்தான் என்றும், தன்னு டைய புரோகிதனாகிய நரைமூதாளனைத் துறவு மேற் கொள்ளும்படிச் செய்தான் என்றும் எட்டாம் பத்து எடுத்து மொழிகின்றது. முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூ தாளனை வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கென வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை பெருமகின் படிமை யோனே. -எட்டாம் பத்து; 4 : 24.28. புலவர்களை இவன் பெரிதும் போற்றி மதிப்பளித் தான் என்பதனை நெடுந்தொலைவு நடந்து வந்த களைப்பால் அறியாது முரசு கட்டிலில் படுத்துறங்கிய மோசிகீரனாரை ஒறுக்காமல் அவருக்கு விசிறி கொண்டு விசிய செயலால் அறியலாம். ' எட்டாம் பத்து கொண்டு இவனைப் பாடியவர் அரிசில் கிழார் ஆவர். இவர் பெருஞ்சேர விரும்பொறையின் அமைச்சராக விளங்கிய தகுதி சான்றவராவர். இச்செய்தி,

தானும் கோயிலாளும் (அரசனும் அரசியும்) புறம் போந்து நின்று கோயிலுள்ள வெல்லாம் கொண்மினென்று காணம் ஒ ன் ப து நூறாயிரத்தோடு அரசுகட்டில் (சிம்மாசனம்) கொடுக்க, அவர் யான் இரப்ப இதனை

- 79. புறம். 50.