பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 _ள்கவென்று அமைச்சுப் பூண்டார்' என்ற எட்டாம் பAதுப் பதிக அடிக்குறிப்பால் விளங்குகின்றது. தகடூர் எறிந்த பெருஞ்சேர விரும்பொறை பதினேழு ஆண்டு ஆட்சி புரிந்தான். இளஞ்சேரல் இரும்பொறை தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின்னர்ச் சேர நாட்டு மன்னனாக முடி புனைந்து கொண்டவன் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை ஆவன். இவன் பெருஞ்சேரலின் மைந்தனாவன். ஆயினும் சிலர் இவன் பெருஞ்சேரல் இரும்பொறையின் தம்பியான குட்டுவன் இரும்பொறையின்மகன் என்றும், செங்குட்டுவன் காலத்தினன் என்றும், செங்குட்டுவனின் தாயாதித் தமையனின் மகன் என்றும் கூறுவர். ஆயினும் பெருஞ் சேரல் இரும்பொறையின் மகனே இளஞ்சேரலிரும்பொறை என்பது அறிஞர் பலர் கண்ட முடிபாகும். இவன் பொலந்தேர்ப் பொறையன்' என்றும் பல்வேற் பொறையன்' என்றும் புலவர் பெருமக்களால் அழைக்கப் பெறுகின்றான். இளஞ்சேரல் இரும்பொறையை ஒன்பதாம் பத்தால் பாடிய புலவர் பெருங்குன்றுார் கிழார். ஒரு ஞான்று இளஞ்சேரல் இரும்பொறையிடம் பரிசில் பெறச் சென்ற இப்புலவர்க்குப் பரிசில் கொடுக்காமல் காலந்தாழ்த் தினான். அது குறித்துப் புலவர் வருத்தமுற்று, தம் வறுமை நிலையைக் குறித்து இரண்டு பாடல்கள் பாடினார். ஆயினும் இளஞ்சேரல் இரும்பொறை நேரே புலவர்க்குப் பரிசில் நல்கவில்லையே தவிர, இப்புலவர் அறியாமல் விடும் மனையும் ஊரும் அமைத்துப் பிறகு அவருக்கு அளித்தான் என்று ஒன்பதாம் பத்தின் அடிக்குறிப்புக் கூறுகின்றது. 80. மயிலை சீனி. வேங்கடசாமி, சேரன் செங்குட்டுவன், ப. 40. 81. புறம். 210, 211.