பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஒன்பதாம் பத்துப் பாடிய காரணத்தால் பெருங்குன்றுார் கிழார்க்கு, மருளிலார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத் தீராயிரங்காணம் பரிசு கொடுத்தான் என்றும் பதிற்றுப் பத்து கொண்டு அறியலாம். இளஞ்சேரல் இரும்பொறை சோழவேந்தன் ஒருவனை வென்றதாகப் ப தி ற் று ப் பத்து குறிப்பிடுகின்றது.' இவனுடைய படைவீரர் சோழனோடு வேற்போர் செய்ய, அவர் போராற்றலுக்கு ஆற்றாத சோழனுடைய படைவீரர் தங்கள் வேல்களைப் போர்க்களத்தே போட்டுவிட்டுப் புறங்காட்டி ஓடினர் என்றும், அவ்வாறு அவர்கள் போர்க் களத்தே போட்டுவிட்டு ஓடிய வேல்களின் எண்ணிக்கை, செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடிப் பரிசாகப் பெற்ற ஊர்களின் தொகையைவிட மிகுதியாக இருந்தது என்றும் ஒன்பதாம் பத்து குறிப்பிடுகின்றது. நன்மரங் துவன்றிய நாடுபல தரீஇப் பொன்னவிர் புனைசெய விலங்கும் பெரும்பூண் --- ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான் to இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே. -ஒன்பதாம் பத்து: 3 இளஞ்சேரல் இரும்பொறையோடு போர் செய்த சோழவேந்தனின் பெயர் பதிற்றுப்பத்துப் பாடல்களுள் காணப்படவில்லை. ஆயினும் அச்சோழனின் பெயர் பொத்தியாண்ட சோழன் என்று பதிகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இவன் ஐந்தெழில் என்னும் கோட்டையை முற்றுகையிட்டு, சோழன், பாண்டியன், விச்சி, இளம் 82. பதிற்றுப்பத்து ஒன்பதாம் பத்து: ஐந்தாம் பாட்டு 3–4.