பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பழையன் மாறன் என்பவர்களை வுென்று, அவர்களிட மிருந்து நிறையாகப் பெற்று வந்த பொருளைக் கொண்டு _டு முதுரில் தன்னை நாடிவந்த இரவலர்க்கு இனிதே வழங்கி மகிழ்ந்தான் என்று பதிகம் குறிப்பிடுகின்றது. வெருவரு தானையொடு வெய்துறச் செய்துசென்று இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ அருமிளைக் கல்லகத் தைந்தெயி லெறிந்து பொத்தி யாண்ட பெருஞ்சோ ழனையும் வித்தை யாண்டவிளம் பழையன் மாறனையும் வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று வஞ்சி மூதூர்த் தந்துபிறர்க் குதவி. ஒன்பதாம் பத்துப் பதிகம் : 3-9. வஞ்சி மூதுரில் சதுக்கம் அமைத்து, அங்குப் பூதர் என்னும் தெய்வங்களைக் கொணர்ந்து அமைத்து, அவற்றிற்குச் சாந்தியும் விழாவும் சிறப்பும் செய்தான் என்று இவன் கூறப்படுகின்றான். s அருந்திறல் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல் -ஒன்பதாம் பத்து; பதிகம்: 1-16. இளங்கோவடிகள், சதுக்கம் பூதரை வஞ்சியுட் டங்து மதுக்கொள் வேள்வி வேட்டோன் -சிலம்பு; நடுகல்: 147-148, என்று சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளதனால் இச்செய்தி யின் உண்மை மேலும் வலுப்பெறுகின்றது. இ ள ஞ் .ே ச ர ல் இரும்பொறையின் அமைச்சராக அமைந்து விளங்கியவர் மையூர் கிழார் என்பவராவர்.