பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசு மயக்கி என்று பதிகம் குறிப்பிடுவதனால், புரோகிதனிலும், அறநெறி வழுவா அறிஞனாக மையூர் கிழாரை இளஞ்சேரல் இரும்பொறை உருப்றெச் செய்தான் என்பது அறியலாம். பதினான்கு ஆண்டுகள் நாடு காவற் றொழிலை நலமுற மேற்கொண்டிருந்த இவன், செங்குட்டுவன் வடநாடு சென்று பத்தினிக் கடவுளுக்குரிய படிமம் கொண்டுவந்து பத்தினிக் கோட்டம் அமைப்பதற்கு முன்னமேயே இறந்து போனான் என்பதனைச் சிலப்பதிகாரம் 83 குறிப்பிடுகிறது என்பர் அறிஞர். 84 இதுகாறும் ஒருவாறு பதிற்றுப்பத்துள் பாடப் பெற் றுள்ள சேரமன்னர்களின் (5 і л гг гі வென்றிகளைக் கண்டோம். இனி, அவர்தம் இயங்கிய முறைகளைக் காண்போம். - 83. சிலம்பு; நடுகற் காதை: 14.7.150. 84. மயிலை சீனி. வேங்கடசாமி, சேரன் செங்குட்டு வன் ப. 43.