பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சேரர் அரசாட்சி முறை சங்க கால மக்கள் மன்னனுக்குச் சிறந்த மதிப்பளித் -ாரிகள். மோசிகீரனார் என்னும் சங்ககாலப் புலமைச் சான்றோரும் மக்களுக்கு நெல்லும் உயிரன்று; நீரும் -பிரன்று; மன்னனே மாநிலத்தில் வாழும் மக்களுக் அெல்லாம் உயிராகக் கருதப்படுவான் என்று புறப்பாட் _ொன்றிற் புகன்றுள்ளார். நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம். -புறம்; 186 : 1-2. இடைக்காலத்தில் நம்மாழ்வார் திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்' என்று மன்னன் மக்கட் சமுதாயத்திற் பெற்றிருந்த மதிப்பினைக் குறிப்பிட்டுள்ளார். பிற்காலச் சோழர் காலப் பெரும் புலவர்களான சேக்கிழாரும் கம்பரும் மன்னனுக்கும் மக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பினை உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயுள்ள தொடர்புக்கு ஒப்புமை கண்டுள்ளனர். மக்களை உடலாகவும் மன்னனை உயிராகவும் சேக்கிழார் குறிப்பிட்டிருக்க, கம்பர் மன்னனை மக்களாகிய உயிர் தங்கும் உடம்பாகக் குறிப்பிட்டுள்ளார். 1. புறநானூறு: 186 : 1-2. 2. நம்மாழ்வார் திருவாய்மொழி 4 : 8. 3. மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாம் கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன் -பெரியபுராணம்; நகரச்சிறப்பு : 14. 4. செயிரிலா உலகினில் சென்று நின்று வாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான். -கம்பராமாயணம்; பாலகாண்டம் : 10.