பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நாளில் சேரர் பரம்பரையில் நிலவியது என்போர் கூற்றுப் பொருந்தா உரை என்று சிலப்பதிகாரம்மூலம் புலனா கிறது என்பார். இளங்கோவடிகளே இந்நுணுகிய அரசியல் உண்மையினைச் சிலப்பதிகாரத்தின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் வாழ்த்துக் காதையில் வடித்துக்காட்டு கின்றார் என்று தம் ஆய்வு நுட்பத்தையும் ஆசிரியர் இந் நூலுள் காட்டுவது குறிப்பிடத்தக்கது. சேரநாட்டுப் பிற இலக்கியங்கள் என்னும் நான்காம் இயலில் தகடுர் யாத்திரை, முத்தொள்ளாயிரம், புறப் பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்கள் கூறும் செய்திகள் ஆராயப்பெற்றுள்ளன. காலத்தின் வாய்ப்பட்டு அழிந்துபோன பல நூல்களுள் தகடூர் யாத்திரை' என்னும் நூலும் ஒன்றாகும். இந்நூலின் 44 செய்யுட்கள் புறத் திரட்டு என்னும் தொகை நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. தகடுர்’ என்னும் ஊரில் நிகழ்ந்த போர்ச் செய்திகளை இந்நூல் விளக்கமாக எடுத்துரைக்கின்றது. இன்றைய தருமபுரியே அந்நாளின் தகடூர் என்பர். தகடுர் அதியமான் புகழ்பெற்ற மன்னன் ஆவன். தகடுர் யாத்திரை' என்னும் நூல் முழுமையாகக் கிடைத்திருப்பின் இன்னும் பல வரலாற்றுச் செய்திகள் நமக்குக் கிடைத் திருக்கக் கூடும். ஐந்தாம் இயல் பக்தி இலக்கியங்கள் குறித்ததாகும். வைணவ பக்தி இலக்கியங்கள் சேரநாட்டுப் பெருமையை எங்ங்னம் எடுத்துரைக்கின்றன என்பதை இவ்வியல் ஆராய்கின்றது. சேரநாட்டில் செங்கோல் செலுத்திய குலசேகரரின் பெருமாள் திருமொழி குறித்து இப்பகுதி விரிவாக எடுத்துக் கூறுகின்றது. திருமொழியின் உள்ளுறை பொருள், நயம், சமுதாய வரலாறு, பழக்க வழக்கங்கள் குறித்து இப்பகுதி நன்கு ஆராய்ந்துள்ளது. சைவ இலக்கியங்களுள் பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கைலாய ஞானவுலா, சுந்தரரின்