பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கண்ணனார். நாள், கோள், திங்கள், ஞாயிறு முதலிய சுடர்கள் போன்று மன்னன் விளக்கமுடையவனாக உள்ளனர். பாரதகாலத்து அக்குரன் போன்ற கொடைப் பண்பைப் பெற்றுள்ளனர். தும்பைப் பூ சூடி வந்த பகை வரைப் போரில் பொருது நின்று மாற்றரசர் பெருமையை மாய்த்தவர்கள்; கூற்றுக் கடவுளான எமனே வந்தாலும் தம் கோட்பாட்டினின்று மாறா மனவுறுதியுடையவர்கள். வலிய தடக்கை சான்ற வீரர் குடிப் பெருமக்களுக்குக் கவசமாக உள்ளனர். விண்ணோரும் வெட்கும் அழகுச் செவ்வியுடைய தம் உரிமை மகளிர்க்கு நற்கணவர்களாக வாய்த்தவர்கள். யானைப் படைகள் பலவற்றைக் கொண்டு படையை ஏராகக் கொண்டு உழும் உழவ ராகவும், பாடிப் பரிசு பெறும் பாடினிக்கு வேந்தராகவும் உள்ளனர். நிலநீர் வளிவிசும் பென்ற நான்கின் அளப்பரி யையே நாள்கோ டிங்கண் ஞாயிறு கணையழல் ஐந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை போர்தலை மிகுந்த வீரைம் பதின்மரொடு துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை அக்குர னனைய கைவண் மையையே அமர்கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர்ப்பிட ழித்த செருப்புகன் முன்ப கூற்றுவெகுண்டு வரினு மாற்றுமாற் றலையே எழுமுடி கெழீஇய திருளுெம ரகலத்து நோன் புரித் தடக்கைச் சான்றோர் மெய்ம்மறை வானுறை மகளிர் நலனிகல் கொள்ளும் வயங்கிழை கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீ ரோதிக் கொடுங்குழை கணவ பல்களிற்றுத் தொகுதியொடு வெல்கொடி நுடங்கும் படையே ருழவ பாடினி வேங்தே. - இரண்டாம் பத்து; 4:1-17.