பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 நெடியோன் போன்று நல்ல புகழ்வாய்ந்தவர்கள் (நெடி யோன் அன்ன நல்லிசை 2; 5: 39) பெருந்தவற்றினைப் பகைவர் செய்திருந்தாலும் அவர் பணிந்து திறை தருவாராயின் அவற்றைக் கொண்டு அவரை விடுப்பவர் சோமன்னர் என்பதும் பதிற்றுப்பத்தால் தெரிய வருகின்றது. புரைவது கினைப்பின் புரைவதோ யின்றே பெரிய தப்புரு ராயினும் பகைவர் பணிந்துதிறை பகரக் கொள்ளுருை. -இரண்டாம் பத்து; 7 : 1.3 அரசியலை முறையே செலுத்திய பேரரசர் வழித் தோன்றல் என்று பாலைக் கெளதமனார் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் புகழ்கின்றார். அவர் கருத்துப் படி அரசியல் முறைமையாவது பின்வருமாறு: வரம்புகடந்த சினமும், அளவுகடந்த காமமும், கை கடந்த கண்ணோட்டமும், பகைவர்க்குப் பெரிதும் அஞ்சு தலும், வாய்மையின் இகந்து பொய்ச்சொல் புகறலும், தொர்புடையார் மாட்டு அளவிறந்த அன்புடைமையும், கையிகந்த தண்டஞ் செய்தலும், இவை போல்வன பிறவும் இவ்வுலகத்தே அறமறிந்து செய்யும் அரசு முறை நடத்தற்கு இடையீடாய்த் தீது விளைவிப்பனவற்றைத் தன் நாட்டின் கண் இல்லையாக்கி, அறத்தையே மிகுதியும் செய்து, தன்னாட்டில் வாழ்பவர் தம்முட் பிறரைத் துன்புறுத்தா மலும், தமக்கு இயைபில்லாத பிறர்க்கு உரித்தான பொருளைச் சிறிதும் விரும்பாமலும், குற்றமில்லாத அறிவுடையராய்ச் செம்மை நெறிக்கண் வழுவுதலின்றி, தம்பால் அன்புசெய்து வாழும் வாழ்க்கைத் துணைவி யைப் பிரியாமல், தாம் ஈட்டியவற்றைப் பலர்க்கும் பகுத்தளித்துத் தாமும் உண்டு இனிது வாழ வெறிதே முத்த யாக்கையும் நோயும் இலராய் மிக்கு நிலவ, கடலும் காடும் தம்மிடத்தே யுண்டாகும் பொருள் பலவும் உதவ அரசியலை முறையே செலுத்தினர் பல்யானைச் செல்கெழு சே. செ. இ.6