பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 குட்டுவனின் முன்னோர் என்று பாலைக் கெளதமனார் பாராட்டுகின்றார். இப்பாடற் பகுதியால் சேரமன்னர் செங்கோற் சிறப்பின் மாண்பு புலனாகின்றது: தீதுசேணிகந்து நன்றுமிகப் புரிந்து கடலுங் கானமும் பலபய முதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப்பொருள் வெ.காது மையி லறிவினர் செவ்விதி னடந்துதம் அமர்துணைப் பிரியாது பாத்துண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி யுய்த்த வுரவோ ரும்பல். -மூன்றாம் பத்து; 2 : 5.11. களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் மக்கள் நல் லொழுக்கத்திலே நாட்டமுடையவர்களாக நிலைக்கச் செய்கிறான்; திருமாலை வழிபடும் நற்பழக்கத்தை அவன் குடிமக்கள் கொண்டுள்ளனர்; மக்களைத் தமக்குரிய நல்லொழுக்கத்திலே நிலைநிறுத்துதல் ஆண்கடனாதலின் சேரமன்னன் ஆண்கடன் நிறுத்த ஆண்டகையாகின்றான். வருத்தமுற்ற குடிமக்களின் நல்லொழுக்கத்தினை இனிது நிலவச் செய்யும் இவனது செயல் துளங்கு குடி விழுத் திணை திருத்திய செயலாகப் புலவர் காப்பியாற்றுக் காப்பியனாரால் பொருத்தமுறக் குறிப்பிடப்படுகின்றது. பிறிதொரு பாடலிலும் இம்மன்னனின் செயலினைப் புலவர் வான்புகழ் வுயர்ந்த நல்ல புகழானது உலக முள்ளளவும் தான் உளதாமாறு நிலைபெற, வீழ்ந்த குடியினரை உயரப் பண்ணிய வெற்றி பெறுதற்குக் காரண மான செய்கை என்று பாராட்டுவர்: துளங்குகுடி விழுத்துணை திருத்தி முரசுகொண்டு ஆண்கடன் இறுத்த நின்பூண்கிளர் வியன்மார்பு. -நான்காம் பத்து; 1: 13-14 பிறிதுமொரு பாடலிலும் இம்மன்னனின் 'துளங்குகுடி திருத்திய வலம்படுவென்றி" பாராட்டப்பட்டுள்ளது. திசை முழுதும் சென்று விளங்கித் தோன்றும் சால்பு, நடுவு