பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பல்வகைப்பட்ட வளங்களும் தம்மிற் கலந்துள்ள நாட்டை அதன் வளம் பலவும் செம்மையுற வருதற்கேற்பத் திருத்திச் செம்மை செய்தவன் என்று களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைக் கவினுறப் பாராட்டுவர் காப்பியாற்றுக் காப்பியனார். மேலும் இச்சேரலர் வேந்தர் பரிசில் மாக்களின் செல்வமாகவும், பாணர்கள் இருக்கும் நாளோ லக்கமாகவும், வாள்துதல் கணவனாகவும், போர் வீரர்க்கு ஆண்சிங்கம் போன்றவனாகவும் பாராட்டப்படுகின்றான்: வளங்தலை மயங்கிய பைதிரங் திருத்திய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் எயின் முகஞ் சிதையத் தோட்டி ஏவலிற் றோட்டி தந்த தொடிமருப் பியானைச் செவ்வுளைக் கலிமா வீகை வான்கழற் செயலமை கண்ணிச் சேரலர் வேந்தே பரிசிலர் வெறுக்கை பாணர் நாளவை வாணுதல் கணவ மள்ள ரேறே. -நான்காம் பத்து; 8: 3.10. நுகர்தற்கு இனிய பல பொருள்களைப் பெற்ற வழியும், அவற்றைத் தனித்தனியாக நுகர்வோம் என்று விரும்பாத கெடாத நெஞ்சத்தோடு, பிறர்க்குப் பகுத்துண்ணும் உணவைத் தொகுத்தளித்த ஆண்மையுமுடையவனாதலால் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைப் பிறர்க்குப் பயன் உண்டாக வாழ்கிறான் எனப் பாடுவார் காப்பியாற்றுக் காப்பியனார். இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம் தருகென விழையாத் தாவி னெஞ்சத்துப் பகுத்துண் டொகுத்த வாண்மைப் பிறர்க்கென வாழ்திரீ யாகன் மாறே. -நான்காம் பத்து; 8: 13.16. சேரன் செங்குட்டுவன் நல்ல நெற்றியையுடைய இளங்கோ வேண்மாட்குக் கணவனாகக் குறிக்கப் பெறு கிறான்.