பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 ......... நன்னுதல் கணவ, — 5; 2:7. இதனால் சேரமன்னர் தம் பட்டத்துப் பெருந்தேவி ம் கொண்டிருந்த அளவற்ற அன்பு புலப்படும். வழங்கும் கொடையினையும் போரிடும் வினையினை பும் ஒப்ப விரும்பியிருக்கின்ற காரணத்தால் பகைவரா பினாரும் தம் மனத்தெழுந்த வியப்பினைத் தாங்காது புகழ்ந்து பாராட்டும் கெடாத கல்வியறிவு ஒழுக்கங்களை அடையவனாகச் சேரன் செங்குட்டுவன் பரணராற் பலபடப் பாராட்டப்பட்டுள்ளான். இகல்வினை மேவலை யாகலிற் பகைவரும் தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவிற் றொ லையாக் கற்ப, -ஐந்தாம் பத்து; 3: 29-31. செங்குட்டுவன் எதனையும் எளிதில் ஈதலையன்றித் கணக்கென அரியவற்றை யோம்புதலைக் கல்லாத வாய்மை யுடையவன் என்று இசைத்தொழில் வல்ல இளைஞர்கள் பாராட்டும் பண்பினன் ஆவன். தன்னிடத்து நட்புச் செய்தோர்க்கும் தன் உரிமை மகளிர்க்கும் வணங்கிய மென்மையினையும், பகைவர்க்கு வணங்காத ஆண்மை யினையும் உடையவன் என்றும் புலவராற் பாராட்டப் பெறும் பண்பு நலன் நிறைந்தவன் ஆவன். கல்லா வாய்மைய னிவனெனத் தத்தம் கைவல் இளையர் நேர்கை நிரைப்ப வணங்கிய சாயல் வணங்கா வாண்மை. -ஐந்தாம் பத்து; 8:7-9. பூக்கள் விரிந்த புனலையுடைய ஆறுகள் மூன்றும் கூடிய முக்கூடலோடு சேரன் செங்குட்டுவன் உவமித்துப் பேசப் பட்டுள்ளான். மூன்று ஆறுகள் கூடுமிடத்து மூன்றிடத்துப் பொருள்களும் ஒருங்கு தொகுவதுபோல், கடல் பிறக்