பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கோட்டிக் கடல்படு பொருளும், சேரநாடுடைமையால் மலைபடுபொருளும், பழையன் முதலியோரை வென்று காவிரி நேர்கிழக்கோடும் நாடுடைமையால் அந்நாட்டுப் பொருளும் ஆகிய மூவகைப் பொருளும் ஒருங்கு தொக ஈட்டு கின்றமையின் சேரன் இவ்வாறு முக்கூடலோடு உவமிக்கப் பட்டான். காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட லனையை. -ஐந்தாம் பத்து; 10 : 6.7. பகைவர் சேரனை வெல்லல் அருமை கருதிப் பணிந்து குன்றாத புது வருவாயினையுடைய தம் நாட்டிடத்தேயுள்ள அரிய செல்வமாகிய கலங்களைத் திறையாகச் செலுத்தப் பெற்று வருகிறான். கன்மிசை யவ்வுங் கடலவும் பிறவும் அருப்ப மமைஇய வமர்கடங் துருத்த ஆண்மலி மருங்கி னாடகப் படுத்து நல்லிசை கனந்தலை யிரிய வொன்னார் உருப்பற நிரப்பினை. -ஐந்தாம் பத்து; 10 : 1.2.16. கற்பு மேம்பாட்டிற்குரிய மாண்புகள் அனைத்தும் ஒருங்கே பெற்ற நங்கைக்குக் கணவனாகவும், நற்பண்பு களால் நிறைந்த சான்றோரைப் புரக்கும் தலைவனாகவும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் காக்கைபாடினியார் நச்செள்ளையாரால் கிளத்தப்பட்டுள்ளான். ஆன்றோள் கணவ சான்றோர் புரவல. -ஆறாம் பத்து ; 5: 1. வெண்மையான ஊன் கலந்தமைந்த சோற்றை உண்ணும் மழவருக்கு மெய்புகு கவசம் போன்றவன் என்றும், குடநாட்டவர்க்குத் தலைவன் என்றும், கொடி கட்டிய தேரையுடைய அண்ணல் என்றும் மேலும் இம் மன்னன் பாராட்டப்படுகின்றான்.