பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 வாலூன் வல்சி மழவர் மெய்ம்மறை குடவர் கோவே கொடித்தேர் அண்ணல். -ஆறாம் பத்து 5 : 8.9. பரிசில் மாக்களின் சிறுகுடியின் மிடிமை நீங்கி வளம் பெருக உபகரிக்கும் - மேற்கில் சேரர்குடியில் மேம்பட்ட விலை வீரர்க்கு மெய்புகு கருவி போல்பவன் என்றும், வீறும் பெருங் கொற்றமுமுடைய வேந்தர்க்கெல்லாம் வேந்தா யுள்ளவன் என்றும், தன்னைத் தஞ்சம் என வந்தடைந் தோர்க்குக் காப்பாயிருப்பவன் என்றும் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பாராட்டப்படுகிறான். இரவன் மாக்கள் சிறுகுடி பெருக உலகந் தாங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துச் செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரணம். - - - -ஆறாம் பத்து; 9 : 7.10. கபிலர் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடுமுகத் தான் பாரியைப் பற்றிய குறிப்பையும் பதிற்றுப்பத்துள் வைக்கின்றார். பெருவிறலும், ஒவியத்தில் எழுதியது போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனையின் கண்ணே இருக்கும் பாவை போன்ற நல்ல அழகும் நலமும் உடை யாட்குக் கணவனும் உன்னமரத்துப் பகைவனும் எமக்கு அரசனும் புலர்த்த சாந்தினையுடைய அகன்ற மார்பி னனும், குன்றாத ஈகைக் கோட்பாட்டால் பெரிய வள்ளி யோனுமாகிய பாரி என்று, பொய்யா நாவிற் கபிலர் பாரியை பாராட்டுகின்றார். பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல் வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல் ஒவத் தன்ன வினைபுனை நல்லிற் பாவை யன்ன நல்லோள் கணவன் பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப்