பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தேவாரப் பதிகங்கள், வேணாட்டடிகளின் திருவிசைப்பா ஆகியன சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்களாகும். இவ்விலக்கியங்களின் பல்வேறு திறன் குறித்து இவ்வியல் ஆராய்ந்துள்ளது. பேராசிரியர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் அவர் களின் நுண்மாண் நுழைபுலமும், வகை தொகை ஆராய்ச்சித் திறனும், நுட்பமான ஆய்வுக் கருத்துகளும் இந் நூலில் நன்கு புலனாகின்றன. மிகப்பரந்துபட்ட ஆய்வுப் பொருளை உள்ளடக்கியதாக விளங்கும் இந்நூலினை நன்கு வரையறை செய்து உரிய மேற்கோள் விளக்கங் களுடன் சான்றுகளைத் தந்திருக்கும் ஆசிரியரின் ஆய்வு நெறி பெரிதும் பாராட்டிற்கு உரியதாகும். ஏராளமான நூல்களுள் நுழைந்து, அரிய பொருள்களை ஆராய்ந்து எடுத்து, எளிய இ னி ய நடையில் சேரநாட்டுச் செந்தமிழரின் வரலாற்றை அரசியல், சமூக வரலாற்றுப் பின்னணியில் படைத்திருக்கும் பேராசிரியரின் தமிழ்த் தொண்டு பாராட்டிற்குரியதாகும். தமிழ்கூறுநல்லுலகம் இந்நூலினை பெரிதும் வரவேற்கும் என நம்புகின்றேன். பழகுதற்கு இனிய பண்பாளரான பேராசிரியர் டாக்டர் சி. பா. அவர்கள் மேன்மேலும் இத்தகைய நல்ல ஆய்வு நூல்களை தமிழுலகத்திற்கு வழங்க என் உளம்நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் உரியன. செ. அரங்கங்ாயகம்