பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 நட்பமைந்த சான்றோர்க்குப் பணிந்தொழுகுகின்றான். பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையுடையவனா யுள்ளான். இளந்துணையாகிய மக்களைக் கொண்டு முதியராகிய பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து தொன்றுதொட்டு வரும் தன் கடமையினைச் செவ்வனே ஆற்றுவிக்கின்றான் செல்வக்கடுங்கோ வாழியாதன். வலம்படு வான்கழல் வயவர் பெரும நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர் புறஞ்சொற் கேளாப் புரைதீ ரொண்மைப் பெண் மை சான்று பெருமட நிலைஇக் கற்பிறை கொண்ட கமழுஞ் சுடர்நுதற் புரையோள் கணவ பூண்கிளர் மார்ப தொலையாக் கொள்கை சுற்றஞ் சுற்ற வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை வணங்கிய சாயல் வணங்கா வாண்மை இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல். -ஏழாம் பத்து 10; 11-12 தகடூரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை அவனுக்கு முன்னே அவன் குடியில் விளங்கிய முன்னோர்களுக்குப் பாதுகாப்பாயிருந்து, மக்கட் கூட்டத்தைப் புரத்தற்கு வேண்டும் நெறிமுறைகளை அறிவுறுத்தும் அறமே காணும் உள்ளத்தையுடைய அமைச்சர் போன்ற சூழ்ச்சி வன்மை படைத்த இயல்புடையவன்; ஆனால், இதனை அறியாமை காரணமாகப் பகைவர் அறியார் ஆயினர் என்றார் அரிசில் கிழார். காவல் எதிரார் கறுத்தோர் நாடுகின் முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து மன்பதை காப்ப வறிவு வலியுறுத்து நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னகின் பண்புகன் கறியார் மடம்பெரு மையிற். -எட்டாம் பத்து ; 2: 3.7.