பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அருள் செய்கின்றான். மெய்ம்மை மொழியால் விளக்கம் பொருந்திய செவ்விய நாவினன்; வணங்காதாரை வலியழித்த ஆண்மையன்; தொடியணிந்த ம க ளி ர் தோளினைக் கூடுதலால் குழைந்த மாலையணிந்த மார்பினன். எல்லாத் திசையினும் சென்று பரவியிருக்கும் இவன் புகழ்கள் கனவினும் தம்மை விரும்பி வேண்டும் பிறரைச் சென்று சேராவாயின. அத்தன்மையனவாகிய அளத்தற்கரிய குணஞ் செயல்களையுடையையாயிருக் கின்றான். பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி கின்வயிற் பிறந்த கல்லிசை கனவினும் பிறர்கசை யறியா வயங்குசெந் நாவிற் படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப அனைய வளப்பருங் குரையை. -எட்டாம் பத்து 9:; 3.8. நிலவுலகத்தே நிறுவப்பட்ட நல்ல இசையும் கேடில்லாத கல்வியும் உடையவன் இவன். நிலவரை கிறீஇய நல்லிசை தொலையாக் கற்ப -எட்டாம் பத்து; 10: 16.17. இளஞ்சேரலிரும்பொறையின் .ெ க ா ைட மாட்சியும் படைமாட்சியும் பெருங்குன்றுார் கிழாரால் இனிதுறக் கிளத்தப்படுகின்றன. பாடி வருவார்க்கு வரையாது வழங்குதலின் பலகாலும் கொண்ட வழியும் குறையாத செல்வத்தையும், பகைவர் பலகாலும் பொருதழித்தவழியும் குறையாத சேனை மறவரையும், அறிவாலமைந்த புலவர் கொடை, செங்கோன்மை, சால்பு, வீரம் என்ற இவற்றால் விரும்பிப் புகழ்தலால் கெடாத நல்ல புகழையும், மாற்றார் மண்ணைப் போருடற்றிக் கைக்கொள்ளுதலால் வரும் செல்வத்தையுடையவன் என்று சேரமான் சிறக்கப் பேசப்பட்டுள்ளான்.