பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பாடுநர், கொளக் கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானைச் சான்றோர் வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும் புகன்று புகழ்ந் தசையா நல்லிசை நிலந்தரு திருவின் நெடியோய் கின்னே. -ஒன்பதாம் பத்து; 2: 12.16. தெளிந்த நீரைக் கொண்டிலங்கும் சந்தன மரங்கள் மிதந்துவரும் வானியாற்றின் நீரைக்காட்டிலும் தெளிவான குளிர்ந்த மென்மையை யுடையவன் என்று மேலும் இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான்: கழைகிலை பெறாஅக் குட்டத் தாயினும் புனல்பாய் மகளி ராட வொழிந்த பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் சாந்துவரு வானி நீரினும் தீந்தண் சாயலன் மன்ற தானே, -ஒன்பதாம் பத்து; 6:9-13, இளஞ்சேரலிரும்பொறை அரசியல் முறை கோடாது ஆளுதலால் நாள்தோறும் நாட்டவரெல்லாம் அவனைத் தொழுது பரவுகின்றனர்; உயர்ந்த நிலைமையினையுடைய தேவருலக வாழ்விற்குரிய ஒழுக்கத்தாலுயர்ந்த சான்றோர் அவனைப் பரவி வாழ்த்துகின்றனர். நன்பல் லூழி நடுவுகின் றொழுகப் பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையிற் நாளின் நாளின் நாடுதொழு தேத்த உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ அரசியல் பிழையாது செருமேந் தோன்றி நோயிலை யாகியர் நீயே. -ஒன்பதாம் பத்து; 9: 8-13. இளஞ்சேரலிரும்பொறை நெஞ்சிலே த ண் ணி ய அன்புடையனாதலால் தண்ணிரையொத்துள்ளான்; அளத் தற்கரிய சூழ்ச்சியுடையனாதலால் பெரிய ஆகாயத்தை