பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 யொத்துள்ளான்; இரவலர் அளவின்றிக் கொள்ளுவதலுற்ற வழியும் செல்வம் குறைவு படாமையால் கடலை யொத்துள்ளான். அளப்பரு மையின் இருவிசும் பனையை கொளக்குறை படாமையின் முந்நீர் அனையை பன்மீ நாப்பண் திங்கள் போலப் பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை. i. -ஒன்பதாம் பத்து; 10: 15.18. இதுகாறும் கூறியவற்றால் சேரவேந்தரின் பண்பு நலன்கள் பலவும் தெள்ளிதிற் புலனாகக் கண்டோம். இனிச் சேரவேந்தர்தம் படைமாட்சியினை விளங்கக் காண்போம். படைமாட்சி சேரமன்னர்கள் நால்வகைப் படையினையும் நலமுறப் பெற்றிருந்தனர். அக்காலத்தே சேரர் வீரம் செறிவுடைய தாயிருந்தது. தமிழ்நாடு மட்டுமின்றிப் பிற நாடுகளிலும் சேரர் படைவீரம் மதிக்கப் பெற்றது. யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படையின் மாட்சி களும் பதிற்றுப்பத்தில் பாங்குறப் பேசப்பட்டுள்ளன. நாற்படையின் நலத்தினைப் பாலைக்கெளதமனார் பின்வருமாறு பாங்குறக் கிளத்துவர். தலையாட்டத்தை யணிந்து விளங்கும் குதிரைகள், இழையணிந்து விளங்கும் யானை, தேர்ச்சீலைகளால் விரிந்து தோன்றும் தேர்கள், போர் செய்வதற்கென முற்பட்ட போரை விரும்பும் வீரர்கள் ஆக இந்நால்வகையும் பொருத்தமுற அமைந்ததே நால்வகைப் படை என நவில்வர் பாலைக் கெளதமனார்: உளைப்பொலிந்த மா இழைப்பொலிந்த களிறு வம்புபரந்த தேர் அமர்க் கெதிர்ந்த புகன்மறவர், -மூன்றாம் பத்து; 2 : 17-20.