பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 பிறிதொரு பாடலிலும் (3; 5) பாலைக் கெளதமனார் நாற்படையினைச் சுட்டுகின்றார். கடுங்கண் யானை, படைஞர், கடும்பரி, நெடுந்தேர் என்ற மொழிகளில் நாற்படையினை நலமுறச் சுட்டுகின்றார். காப்பியாற்றுக் காப்பியனார் நான்காம் பத்தில் சிவந்த பிடரியினையுடைய குதிரைமீதிவர்ந்தும், நீண்ட கொடி யினையுடைய தேர்மீதேறியும், முகபடாம் அணிந்து விளங்கும் கண்டார்க்கு அச்சத்தைத் தோற்றுவிக்கும் புள்ளி பொருந்திய நெற்றியினையுடைய பொன்னரிமாலை யணிந்த யானையினுடைய வலிமை பொருந்திய கழுத்தின் மீதிருந்தும் போர்த் தொழிலில் கூறப்படும் அறத்துறை மாறாத வீரரது வலி கெட வெற்றி கொள்வதாகக் களங் காய்க் கண்ணி நார்முடிச்சேரலைப் பாராட்டு முகத்தான் நாற்படையின் நலத்தினைப் பாங்குற மொழிந்துள்ளார். செவ்வுளைய மாவூர்ந்து நெடுங்கொடிய தேர்மிசையும் ஒடைவிளங்கு முருகெழு புகர்நுதற் பொன்னணி யானை முரண்சே ரெருத்தினும் மன்னிலத் தமைந்த..................... மாறா மைந்தர் மாறுநிலை தேய. -நான்காம் பத்து; 4 : 4.9. முதலாவதாக யானைப் படையின் சிறப்பினைக் கான் போம். யானைப்படை பின்வருமாறு சிறப்புறக் கிளத்தப் பட்டுள்ளது. 1. பழிதீர் யானை –2 ; 1 : 18 2. போர்வல் யானை –3 ; 1 : 17 3. கடுங்கண் யானை —3; 5 : 2 4. பொன்னணி யானை –4 ; 4 : 7 5. பெருங்கை மதமா —5; 3 : 4 6. வினைகவில் யானை —9 ; 2 : 4 7. தொழில்நவில் யானை –9 ; 4 : 4 8. பெருநல் யானை –9 ; 10 : 57