பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 சேர மன்னர் வரலாறு



உடையனாய் இருக்கின்றாய்; நாட்டின் பரப்புச் சிறிது என்று கருதி மேலைக் கடற்கும் கீழைக்கடற்கும் இடைப்பட்ட நிலப் பகுதியை வென்று கொண்டாய்; அதனால் நாளும் ஞாயிறு நின் கடலிலே தோன்றி நின் கடலிலே மறைகிறது; நாடு பரப்புவதிலே கருத்தைச் செலுத்தும் வேந்தன், பரப்புமிகுதற்கேற்ப நாட்டின் வருவாயையும் நாடோறும் பெருகச் செய்தல் அரசியற்கு இன்றியமையாது என்ற கருத்தையும் நீ மறந்தவனில்லை என்பது நன்கு தெரிகிறது” என்று பாராட்டிக் கூறினார்.

தெற்கிலும் கிழக்கிலும் நாடு கண்ணகற்றியும் வருவாய் பெருக்கியும் உதியனது அரசியல் இயங்குவது கானும் வானவாசிகள், முன்னைச்சேரர் வரையறுத்த வரம்பு கடவாது அஞ்சியே ஒழுகினர்; வரம்பறுத்த வேந்தனது பார்வை வரம்பின் மேல் இருப்பது வானவாசிகட்குத் தெரிந்தவண்ணம் இருக்குமாறு உதியன் காவல் செய்தொழுகியது கண்டு முடிநாகனார் பெருவியப்புக் கொண்டார்; “வானவரம்பனை, நீயோ பெரும்” என்று பாராட்டினார்.

மேலும், அவர், “வானவரம்பரான பண்டையோர் போல இன்றும் நீ வானவரம்பனாய் விளங்குகின்றாய்; அதனால், பண்டு பாரதப் போரில் பெருஞ்சோற்றுநிலை என்னும் புறத்துறை முற்றிய நின் முன்னோரைப் போல இன்றும் அப் புறத்துறைச் செயலைச் செய்கின்றாய். இவ்வாறு சேரவரசு மேற்கொண்டு செய்தற்குரிய கடன்களைச் செவ்வனம் ஆற்றி விளங்குவதால், இனிக்கும் பால் இனிமை திரிந்து புளிக்குமாயினும், ஒளி திகழும் பகற்போது ஒளி திரிந்து இருளுமாயினும், நெறி