பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 சேர மன்னர் வரலாறு



சேரர்படை சென்று அவர்களைத் துரத்திற்று. கொண் கான நாட்டில் ஒருகால் அவர்கள் பாசறை அமைத்திருக்கையில், பகைவர் இன்னிசை இயவராய் வந்து குழலூதி மகிழ்வித்தனர். அக் குழலிசையில் சேரர்படையின் தலைவர் ஈடுபட்டு அருள்மேவிய உள்ளத்தராயினர். அதன் பயனாகச் சேரர் படை வானவாசிகட்குத் தோற்றோடிவதாயிற்று. அதனை அறிந்திருந்தமையின், உதியஞ்சேரல் போர்க்களத்தின் கண் இயவரைக் கொண்டு இம்மென இசைக்கும் ஆம்பலங்குழலை இசைக்கச் செய்து மறவர் மறம் இறைபோகாவண்ணம் அரண் செய்தான்.

இதனைக் கேட்டறிந்த இளங்கீரனார், ஒருகால் தலைமகன் ஒருவன் தன் இனிய காதலியைப் பிரிந்து பொருள் கருதிப் பிரிந்து செல்வது பொருளாகப் பாட வேண்டியவராயினார். அத் தலைவன் ஒரு சுரத்திடையே சென்றுகொண்டிருக்கையில் தன் காதலியை நினைத்துக் கொண்டான். அவன் மனக் கண்ணில் காதலியின் திருமுகம் தோன்றியது. அவன் தன் பிரிவை உணர்த்தக் கேட்டதும், அவள் ஆற்றாமல் கண் கலுழ்ந்ததும், அதனை அவனுக்குத் தெரியாவாறு தன் கூந்தலால் அவள் மறைத்துக் கொண்டதும், அவளை அறியாமலே மெல்லிய அழுகைக்குரல் அவள் பால் தோன்றியதும் நினைவுக்கு வந்தன. அவற்றை அச் சான்றோர் அழகிய பாட்டாக எழுதினார். எழுதுங்கால், அவளுடைய ஏங்கு குரலை எடுத்துக்காட்ட நினைத்த அவருக்கு, உதியன் செய்த போர்க்களத்தே இயவர் எழுப்பும் ஆம்பற் குழலிசை உயர்ந்த உவமையாகத் தோன்றிற்று. “நெய்தல்