பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் 103



உண்கண் பைதல் கூரப், பின்னிருங் கூந்தலின் மறையினள் பெரிதழிந்து, உதியனத் மண்டிய ஒலிதலை ஞாட்பின், இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும், ஆம்பலங் குழலின் ஏங்கிக் கலங்கஞர் உறுவோள்[1]” என்று பாடின. காதலியின் ஏக்கம் பொருள் மேற்சென்ற அக்காளையது உள்ளத்தை மாற்ற மாட்டாது ஒழிந்தது போல, இவரது ஆம்பற் குழலிசை உதியனுடைய மறவருள்ளத்தை மாற்றமாட்டா தொழிந்தது என்பது குறிப்பு.

செங்குட்டுவன் வடநாடு சென்றபோது, நீலகிரியில் தங்கியிருக்கையில் கொங்கணக் கூத்தரும் பிறரும் போந்து பாடிப் பரிசில் பெற்றதும்[2], ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் வடநாட்டிற் பொருடற்றச் சென்றபோது கொண்கானநாட்டு விறலியர் போந்து இசையும் கூத்தும் நல்கக் காக்கைபாடினியார் போந்து அவன் உள்ளத்தை வினைமேற் செலுத்தியதும்[3], கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் மேலைக் கடற்கரைக்குப் போந்த போர்ச்சுகீசியர் கோவா நாட்டினின்றும் கன்னட நாட்டினின்றும் வரும் அழகிய ஆடல் மகளிரின் கூட்டம் நயந்து அஞ்சு தீவுக்குப் போந்து தங்கியதும்[4] இக் கருத்துக்குமிக்க ஆதரவு தருகின்றன. இவ்வியல்பு இன்றும் அப்பகுதியில் மறையாமல் இருந்து வருகிறது. வானவாற் (Honawar)றிலிருந்து தோகைக்கா (Joag) என்ற ஊர்க்குச் செல்லும் வழியில் கொங்கணர் மனைகளில் தங்கின் இத்தகைய இசையின்பத்தை வழிச்செல்லும் நாம் பெறுகின்றோம்.


  1. நற். 113.
  2. சிலப்.26.85-127.
  3. பதிற். 51.
  4. Bom. Gazet. Kanara Part ii. p. 253.