பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 109


களைச் செய்து மகிழ்வித்ததோடு சோழ பாண்டியப் படைத் தலைவர்கட்கும் உரிய சிறப்புகளைச் செய்து இன்புறுத்தினான்.

இமயவரம்பனான நெடுஞ்சேரலாதன் இமயத் துக்குச் சென்றிருந்த காலையில், நாட்டின் ஆட்சி முறையில் மக்கள் எய்திய நலந் தீங்குகளை நேரிற் கண்டறியும் கருத்தால், அவன் நாட்டின் பல பகுதி கட்கும் செல்ல வேண்டியவனானான். காடு கொன்று நாடாக்குதலும், குடிபுறந்தருவோரும் பகடு புறந்தரு வோருமாகிய நாட்டு மக்கட்கு வேண்டும் நலங்களைப் புரிதலும், அந் நாளைய வேந்தன் பணியாதலின், அதுபற்றி அவன் அடிக்கடி தெற்கிலும் கிழக்கிலும் உள்ள நாடுகட்குச் சென்று வந்தான். இஃது இவ்வாறிருக்க -

கொண்கான நாட்டுக் கடற்கரையில் தீவுகள் பல இருந்தன. அவற்றுள் கடம்பர் என்போர் வாழ்ந்து வந்தனர்; அத் தீவுகளுள் கூபகத் தீவு என்பது ஏனைய பலவற்றினும் சிறிது பெரிது. அக் கடம்பர்கள் அதனைத் தலைமை இடமாகக் கொண்டு தெற்கிலுள்ள தீவுகள் பலவற்றிலும் பரவி வாழ்ந்து வந்தனர். இன்றைய வட கன்னடம் மாவட்டத்தைச் சேர இருக்கும் கோவா என்னும் தீவு அந் நாளில் கூவகத் தீவம் என்ற பெயர் பெற்று நிலவியது[1]; தெற்கில் தென் கன்னட மாவட்டத்தைச் சேர்ந்திருக்கும் கடம்பத் தீவு (Kaamat Island) கடம்பர் கட்கு முதல் இடமாகும். கடம்ப


  1. Journal of the Bombay Branch of the Royal Asiatic Society: Vol. xi p. 283. L. Rice’s Mysore Vol. ip. 300