பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 127



கணைய மரங்கள் நான்று கொண்டிருக்கும் உயரிய வாயிலும் உடைய இப் பாசறை யிடத்தே நீ நெடிது தங்கிவிட்டாய்; அதனால் நின்னைக் காண்பது விரும்பி வருவேனாயினேன்'’ என்றார். சேரலாதன் நெஞ்சு மகிழ்ந்து அவரது அன்பை வியந்து பாராட்டினான். அக்காலையில் அன்பரது அன்பு பற்றிய பேச்சொன்று உண்டாயிற்று. “அன்பால் பிணிப்புண்ட ஆண் மக்களாகிய என் போல்வார்க்கே நின் பிரிவு ஆற்றாமையை விளைவிக்குமாயின், நின்னையின்றி அமையாத நின் காதலியின் ஆற்றாமை எத்துணை மிகுதியாக இருக்கும் என்பதை எண்ணுதல் வேண்டும்” என்றார்.

அவரது சொல்வலையில் சிக்கிய இமயவரம்பன் மனக் கண்ணில், அவனுடைய காதலியான தேவியின் அன்புருவம் காட்சியளித்தது; ஒருசில சொற்களால் அவன் தன் மனைவியின் குணநலங்களைச் சொன் னான். அச் சொற்களையே கண்ணனாரும் கொண் டெடுத்து, “சேரவேந்தே, நின் தேவியானவள் ஆறிய கற்பும் அடங்கிய சாயலும் உடையவள்; நீ கூறுமாறு ஊடற் காலத்தும் இனிய மொழிகளையே மொழியும் இயல்பினள்; சிவந்த வாயும் அமர்த்த கண்ணும் அசைந்த நடையும் சுடர்விட்டுத் திகழும் திருநுதலும் உடைய நின் தேவி நின்னை நினைத்தற் குரியன்; நின் மார்பு மகளிர்க்கு இனிய பாயலாம் பான்மை யுடையது; நீயோ அதனை அவர்கட்கு நல்குதலும், நல்காது பிரிதலும் கொண்டு உறைகின்றாய்; இக் காலத்தில் நின் மார்பை நின் தேவியார்க்கு